விளையாட்டு

7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்ல் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது.

7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

7வது முறையாக உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES

ஒருநாள் தொடரை பைப்பற்றிய நியூசிலாந்து!

நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

புதிய சாதனை படைத்த டாம் லாதம் !

நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில்,பிறந்தநாள் அன்று அதிக ரன்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையை டாம் லாதம் படைத்துள்ளார். இவர் 140 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் சச்சினின் 24 ஆண்டு கால சாதனையை டாம் லாதம் முறியடித்துள்ளார்.இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு தனது பிறந்தநாளில் 134 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES

தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்கா அணி!

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 2-ம் நாள் முடிவில் வங்காளதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முது ஹசன் ஜாய் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மஹ்முது ஹசன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு லிட்டன் தாஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். லிட்டன் தாஸ் 41 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ், மஹ்முத் ஹசன் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 82 ரன்கல் சேர்த்தது.இறுதியில், வங்காளதேசம் அணி 115.5 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மஹ்முது ஹசன் 137 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து, 69 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES

தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்று இருந்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லாகூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பந்துவீச்சை தேர்வுசெய்தார். அந்த அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் உள்பட தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். 41.5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இதனை தொடர்ந்து 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 37.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

banner

Related Stories

Related Stories