விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்களை அதிகப்படியாக வேலை வாங்குகிறதா BCCI ? - தோல்வியை தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சை!

எங்களுக்கு ஓய்வு தேவை என இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா கூறியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களை அதிகப்படியாக வேலை வாங்குகிறதா BCCI ? - தோல்வியை தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டி20 உலகக்கோப்பையில் நியுசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. இந்த தோல்வி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இந்த தோல்விக்கு டெக்னிக்கலாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கூறியிருக்கும் ஒரு காரணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதைப்பற்றி பெரிதாக யாருமே இதற்கு முன் பேசியதில்லை.

தோல்விக்கு பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர், 'ஆறு மாதங்களாக பயோ பபிளிலேயே இருக்கிறீர்களே. அது உங்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தவில்லையா?' எனக் கேட்டார்.

அதற்கு பும்ரா, 'நிச்சயமாக, ஆறு மாதமாக தொடர்ந்து பயோ பபிளில் இருந்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஓய்வு தேவை. குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறோம். இப்போதைய சூழலில் இப்படித்தான் இருக்கவேண்டும் என புரிகிறது. ஆனால், பயோ பபிளில் ஒருந்து மீண்டும் மீண்டும் செய்ததையே திரும்ப செய்வது மனச்சோர்வைத் தருகிறது' எனப் பேசியிருந்தார்.

மனச்சோர்வு, மன அழுத்தம் குறித்தெல்லாம் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பெரிதாக பேசியதில்லை. பும்ரா மட்டுமே அதைப்பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை அதிகப்படியாக வேலை வாங்குகிறதா BCCI ? - தோல்வியை தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சை!

இந்திய வீரர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு இருப்பதாலயே அவர்கள் மனச்சோர்வு அடைகின்றனர். அந்த மனச்சோர்வு தோல்விக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய வீரர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறதா எனக் கேட்டால், ஆம் நிச்சயமாக வேலைப்பளு அதிகமாகவே இருக்கிறது.

கடந்த 2020 ஆகஸ்ட்டில் ஐ.பி.எல் ஆடுவதற்காக இந்திய வீரர்கள் துபாயுக்கு பறந்தனர். பயோ பபிள் வாழ்க்கையை தொடங்கினர். அப்போதிருந்து இப்போது வரை இடைவிடாமல் அடுத்தடுத்த தொடர்களில் ஆடிக்கொண்டே இருக்கின்றனர். அந்த 2020 ஐ.பி.எல் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடர் அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக உள்ளூர் தொடர், அடுத்து மீண்டும் ஐ.பி.எல் அடுத்து நியுசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, அடுத்து இங்கிலாந்து தொடர் அடுத்து மீண்டும் ஐ.பி.எல். அது முடிந்த கையோடு உலகக்கோப்பை என ஒரு வருடமாக தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கின்றனர். இடையில் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓய்வு கிடைத்தது.

இந்த அதிகப்படியான வேலைப்பளு நிச்சயமாக வீரர்களை மனதளவில் பாதிக்கவே செய்யும். விளையாட்டுலகில் இப்போதுதான் மனரீதியான பிரச்சனைகள் மெது மெதுவாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டிலும் மேக்ஸ்வெல், ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் மனச்சோர்வு பற்றி வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். இந்திய வீரர்கள் யாரும் அது பற்றி பெரிதாக பேசியதில்லை. இப்போதுதான் பும்ரா அதுகுறித்துப் பேச முற்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களை அதிகப்படியாக வேலை வாங்குகிறதா BCCI ? - தோல்வியை தொடர்ந்து வெடிக்கும் சர்ச்சை!
HAMAD I MOHAMMED

உலகளவில் கிரிக்கெட்டுக்கு அதிக வரவேற்பும் வியாபரமும் இருக்கும் நாடு இந்தியாவே. அதனால் இந்திய வீரர்களை எவ்வளவு அதிகமாக ஆட வைத்து வணிகம் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாக ஆட வைக்கின்றனர். உலகக்கோப்பைக்கு இரண்டு நாட்கள் முன்பு வரை பிசிசிஐ ஐ.பி.எல் போட்டிகளை நடத்தியிருக்கிறது. ஐ.பி.எல் ஆடி முடித்த சில நாட்களிலேயே பாகிஸ்தானுடன் போட்டி. வீரர்களுக்கு ஆற அமர உட்காந்து யோசிப்பதற்கு கூட நேரம் கிடையாது.

வீரர்கள் கோடிக்கோடியாய் சம்பாதிப்பதால் இதையெல்லாம் பொறுத்துதான் ஆக வேண்டும் என விதண்டாவாதம் பேசலாம். ஆனால், அவர்கள் பந்தய குதிரைகள் அல்ல. மனிதர்கள். வியாபாரத்திற்காக வீரர்கள் மனதளவில் சோர்வடைய செய்யும் நிலைக்கு தள்ளுவதை தடுக்க வேண்டும். பும்ராவை போன்று மற்ற வீரர்களும் பி.சி.சி.ஐயின் காதுகளுக்கு கேட்குமாறு வெளிப்படையாக பேச வேண்டும்.

banner

Related Stories

Related Stories