விளையாட்டு

‘நானும் தோனியும் கட்டியணைத்து நிறைய அழுதோம்’ - ஓய்வு அறிவிப்பு குறித்து மனம்திறந்த ரெய்னா!

தோனியும் ரெய்னாவும் களத்திலும் அதற்கு வெளியிலும் மிக நெருங்கிய நண்பர்கள்.

‘நானும் தோனியும் கட்டியணைத்து நிறைய அழுதோம்’ - ஓய்வு அறிவிப்பு குறித்து மனம்திறந்த ரெய்னா!
PC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அவரது நெருங்கிய சினேகிதரும், இந்திய அணியின் இடக்கை பேட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் தோனி ஓய்வை அறிவிக்க இருக்கிறார் என்பது அவருக்கு முன்னரே தெரியும் என்றும், இதனால் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட தானும் தயாராக இருந்ததாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள ரெய்னா “சென்னையை வந்தடைந்தவுடன் தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என எனக்குத் தெரியும். அதனால் நான் தயாராக இருந்தேன். பியுஷ் சாவ்லா, தீபக் சாஹர் மற்றும் கரன் ஷர்மா 14-ம் தேதி தனி விமானம் மூலம் ராஞ்சி வந்து அங்கிருந்து தோனி மற்றும் மோனு சிங்கை கூட்டிக்கொண்டு சென்னை வந்தனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “எங்கள் ஓய்வு அறிவிப்பை நாங்கள் வெளியிட்டவுடன் இருவரும் தழுவிக்கொண்டு நிறைய அழுதோம். நான், பியுஷ், அம்பத்தி ராய்டு, கேதார் ஜாதவ் மற்றும் கரன் எல்லோரும் உட்கார்ந்து பிறகு எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் உறவு குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

தோனி, ரெய்னா இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும் இருவருமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ளனர்.

banner

Related Stories

Related Stories