விளையாட்டு

விளையாட்டுத் துறையின் 'ஆஸ்கர்' விருதை வென்றார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

லாரியஸ் விருதை வென்ற சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வென்றது குறித்து பகிர்ந்து தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

விளையாட்டுத் துறையின் 'ஆஸ்கர்' விருதை வென்றார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விளையாட்டு உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் லாரியஸ் விருது ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை, அணி, கம்பேக் என ஒவ்வொரு பிரிவிலும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.

அதன்படி, ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஃபார்முலா ஒன் வீரர் ஹாமில்டன் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உலகளவில் ரசிகர்களிடம் நடத்திய வாக்கெடுப்பில் இருவருக்கும் சம வாக்கு கிடைத்ததன் அடிப்படையில் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஸ்பானிஷ் கோப்பை தொடரில் பார்சிலோனா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததற்காக மெஸ்ஸிக்கும், ஃபார்முலா ஒன் தொடரை 6வது முறையாக வென்றதற்காக ஹாமில்டனுக்கும் ரசிகர்கள் வாக்களித்தனர். கால்பந்து வீரர் ஒருவர் லாரியஸ் விருதை வெல்வது இது முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு.

இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Simone Biles-க்கு 3வது முறையாக வழங்கப்பட்டது. சிறந்த தருணத்திற்கான விருது மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வாக்குகள் அதிகமாக சச்சினுக்கு கிடைத்த நிலையில், இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

2011 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற தருணம் எவராலும் மறக்க முடியாதது. இந்திய அணி கோப்பையை வென்றதும், வீரர்கள் சச்சினை தோளில் சுமந்துகொண்டு மைதானத்தை வலம் வந்து கொண்டாடிய தருணம், கிரிக்கெட் அரங்கின் ஆல் டைம் ஃபேவரைட் தருணமாக பார்க்கப்படுகிறது.

விளையாட்டுத் துறையின் 'ஆஸ்கர்' விருதை வென்றார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் Steve Waugh-இடம் இருந்து இந்த விருதை சச்சின் பெற்றுக்கொண்டரர். உலகக்கோப்பை வென்ற தருணம் குறித்துப் பேசிய சச்சின், உலகக்கோப்பையை 2011ஆம் ஆண்டு வென்றது நம்ப முடியாத தருணம், கோப்பை வென்றதை வார்த்தைகளால் இன்றும் விவரிக்க முடியவில்லை.

1983ல் இந்தியா உலகக்கோப்பையை முதல் முறையாக வென்ற போது, தனக்கு 10 வயது எனக் கூறிய சச்சின், கோப்பை வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடியது, தன்னால் உணரமுடியவில்லை என்றும், ஆனாலும் அனைவருடனும் சேர்ந்து தானும் கொண்டாடியதாக தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

தன்னாலும் ஒருநாள் இந்தியா கோப்பையை வெல்லவேண்டும் என அவர் அப்போது எண்ணியதாக கூறினார். 1983க்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்தியா கோப்பையை வென்றது என் வாழ்க்கையின் மிகப் பெருமையான தருணம் என உணர்வுப்பூர்வமாக பேசிய சச்சின், உலகக்கோப்பை வென்றது குறித்து பல்வேறு உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தார்.

இறுதியாக, இந்தக் கோப்பை தனக்கானது மட்டுமல்ல, நம் அனைவருக்கும் சொந்தமானது என கூறிய சச்சின், இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கனவுகளைத் துரத்த வீறுநடை போடவேண்டும் எனவும் இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறினார்.

banner

Related Stories

Related Stories