விளையாட்டு

டாக்டரின் அறிவுரையை மீறி மீண்டும் கிரிக்கெட் விளையாடவிருக்கும் சச்சின் டெண்டுல்கர்... எதற்காக தெரியுமா?

‘கிரிக்கெட் ஜாம்பவான்’ சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டும் கிரிக்கெட் ஆட உள்ளார்.

டாக்டரின் அறிவுரையை மீறி மீண்டும் கிரிக்கெட் விளையாடவிருக்கும் சச்சின் டெண்டுல்கர்... எதற்காக தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட ‘கிரிக்கெட் ஜாம்பவான்’ சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டும் கிரிக்கெட் ஆட உள்ளார்.

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளை சரிசெய்ய நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது. இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் செயல்படுகிறார்.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கு நடுவே, சச்சின் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ளத் தயாரா என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் கேட்டிருந்தார். எல்லிஸ் பெர்ரி, 2019-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டரின் அறிவுரையை மீறி மீண்டும் கிரிக்கெட் விளையாடவிருக்கும் சச்சின் டெண்டுல்கர்... எதற்காக தெரியுமா?

அவரது சவாலை ஏற்றுக்கொண்டுள்ள சச்சின், ஒரு ஓவர் விளையாடத் தயார் என ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், “அருமையான விஷயம் எல்லிஸ். களத்தில் இறங்கி ஒரு ஓவர் ஆடுவதன் மூலம் கூடுதல் நிதி திரட்ட முடியும் என நம்புகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும், ஆஸ்திரேலிய வீராங்கனையின் விருப்பத்திற்காக விளையாட ஒப்புக்கொண்டுள்ள சச்சினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிப் போட்டியில் இடைவேளையின்போது, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் ஒரு ஓவரை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வார். அப்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 10 பேர் களத்தில் பீல்டிங்கில் ஈடுபடவுள்ளனர்

banner

Related Stories

Related Stories