விளையாட்டு

தங்கப்பந்தை அடுத்து லா லீகா தொடரிலும் ரொனால்டோ சாதனையை முறியடித்த மெஸ்ஸி : ரசிகர்கள் கொண்டாட்டம்!

லா லீகா கால்பந்து தொடரில் 35வது ஹாட்ரிக் கோல் பதிவு செய்த மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தார். 

தங்கப்பந்தை அடுத்து லா லீகா தொடரிலும் ரொனால்டோ சாதனையை முறியடித்த மெஸ்ஸி : ரசிகர்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லா லீகா கால்பந்து தொடரின் ஆட்டம் ஒன்றில் முதலிடத்தில் உள்ள பலம் வாய்ந்த பார்சிலோனா அணி, மல்லோர்கா அணியுடன் விளையாடியது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மெஸ்ஸியின் குழந்தைகள் அவருக்கு தங்கப்பந்து விருதை மைதானத்திற்குள் கொண்டு வந்து வாழ்த்திய ருசிகர நிகழ்வு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடக்கம் முதலே பார்சிலோனா அணி ஆட்டத்தை தங்கள் வசம் வைத்திருந்தது. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் Antoine Griezmann-ம், 17வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான மெஸ்ஸி தொலைவிலிருந்தும் எதிரணி வீரர்களை அசால்ட்டாக எதிர்கொண்டு கோல் அடித்து அசத்தினர்.

35வது நிமிடத்தில் மல்லார்கோ அணி வீரர் Ante budimir கோல் அடிக்க, பார்சிலோனா சார்பில் 41வது நிமிடத்தில் மெஸ்ஸியும், 43வது நிமிடத்தில் Luis Suarez-ம் கோல் அடித்தனர்.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் 64வது நிமிடத்தில் மல்லார்கோ அணி சார்பில் Ante budimir 2வது கோலை அடித்தார். ஆட்டநேர முடிவு கட்டத்தில் 83வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கோல் அடிக்க, அவரது ஹாட்ரிக்கால் மைதானம் ஆரவாரக் குரலில் மெய்சிலிர்த்தது.

முடிவில், மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோலுடன் 5க்கு 2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. லா லீகா தொடரில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடிப்பது இது 35வது முறையாகும்.

இதன்மூலம், 34 முறை லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ள ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்தார்.

சமீபத்தில், பேலன் டி ஆர் விருதையும் 6வது முறையாக மெஸ்ஸி வென்று, ரொனால்டோவின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories