விளையாட்டு

6வது முறையாக சிறந்த வீரர் பட்டம் : தங்கப்பந்து வென்ற மெஸ்ஸி!

கால்பந்து வீரர்களுக்கான Ballon d’Or விருதை வாங்கிய நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

6வது முறையாக சிறந்த வீரர் பட்டம் : தங்கப்பந்து வென்ற மெஸ்ஸி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆண்டுதோறும் கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஃப்ரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில் Ballon d'Or தங்கப்பந்து விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து பயிற்சியாளர்கள், முன்னணி பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என வாக்களித்து ஆண்டின் சிறந்த வீரரை தேர்வு செய்வர்.

அதன்படி, நடப்பாண்டிற்கான சிறந்த வீரர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஃப்ரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த வீரருக்கான பட்டியலில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி, யுவெண்டஸ் கிளப் அணியின் ரொனால்டோ மற்றும் லிவர்பூல் அணியின் Virgil van Dijkம் ஆகியோர் இருந்தனர்.

6வது முறையாக சிறந்த வீரர் பட்டம் : தங்கப்பந்து வென்ற மெஸ்ஸி!

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் தலா 5 முறை விருதை வென்றுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான Ballon d'Or தங்கப்பந்து விருதை நட்சத்திர வீரரான மெஸ்ஸி 6வது முறையாக தட்டிச்சென்றார்.

கடந்தாண்டு இந்த விருதை வென்ற குரேஷியாவின் லூகா மோட்ரிச், மெஸ்ஸிக்கு Ballon d'Or விருதை அளித்தார். லிவர்பூல் அணியின் Virgil van Dijk 2வது இடத்தையும், யுவெண்டஸ் அணியின் ரொனால்டோ 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதற்கு முன்னதாக, 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் மெஸ்ஸி இந்த தங்கப்பந்து விருதை வென்றுள்ளார். 6வது முறையாக இந்த விருதை வென்றதன் மூலம், அதிக முறை தங்கப்பந்து விருதை வென்ற வீரர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆனார்.

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி பட்டம் வெல்ல மெஸ்ஸி முக்கிய பங்கு வகித்தார். 2019ஆம் ஆண்டில் இதுவரை 60 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 56 கோல்கள் அடித்துள்ளார்.

கடந்த சீசனில் லா லீகா தொடரில் 34 போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி 36 கோல்களை பதிவு செய்தார். ஒட்டுமொத்தமாக பார்சிலோனா அணிக்காக 700 போட்டிகளில் 614 கோல்களை அடித்துள்ளார்.

லா லீகா தொடரில் 10 முறையும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் 4 முறையும் பார்சிலோனா கிளப் அணி பட்டம் வெல்ல மெஸ்ஸி முக்கிய பங்கு வகித்தவர்.

6வது முறையாக சிறந்த வீரர் பட்டம் : தங்கப்பந்து வென்ற மெஸ்ஸி!

கோபா டெல் ரே தொடரில் அர்ஜெண்டினா அணிக்காக 6 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள மெஸ்ஸி, நடப்பாண்டில் சிறந்த வீரர் விருதை வென்று 6வது முறையாக தங்கப்பந்து விருதையும் அலங்கரித்துள்ளார்.

இதனையறிந்த ஃபுட்பால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், #Messi என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்துள்ளது.

banner

Related Stories

Related Stories