விளையாட்டு

“தோனி, கங்குலி போன்றோரால் முடியாததைச் செய்கிறார் கோலி” - கம்பீர் பாராட்டு!

கங்குலி, தோனியை விட சிறந்த டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார் என, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

“தோனி, கங்குலி போன்றோரால் முடியாததைச் செய்கிறார் கோலி” - கம்பீர் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இதையடுத்து இந்திய அணியினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் கோலியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

போட்டி முடிந்த பிறகு இதுகுறித்துப் பேசிய கம்பீர், ''டெஸ்ட் ஆட்டத்தில் தோற்பதற்கு கோலி அஞ்சுவதில்லை. தோல்வியை கண்டு அஞ்சினால் உங்களால் வெற்றி பெறமுடியாது. தோல்வியை கண்டு கோலி ஒரு போதும் அஞ்சியதில்லை அதுதான் கோலியின் தனிப்பட்ட குணம்.

நாம் கங்குலி, தோனி, டிராவிட் பற்றிப் பேசுகிறோம். ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தற்போது வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வெல்கிறது. இதர கேப்டன்கள் எடுக்காத துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்துள்ளார்.

“தோனி, கங்குலி போன்றோரால் முடியாததைச் செய்கிறார் கோலி” - கம்பீர் பாராட்டு!

மற்ற கேப்டன்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் தோல்வியடைய மாட்டோம் என எண்ணினார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே வெளிநாடுகளில் ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடினார்.

ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவை அணியில் சேர்த்துக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் இந்திய அணி ஹர்டிக் பாண்டியா மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ததால் அந்த டெஸ்டில் வென்றது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories