விளையாட்டு

கோலி சிறந்த கேப்டனாக இருக்க தோனி, ரோஹித் தான் காரணம் : கோலியை சீண்டும் கம்பீர்

தோனி மற்றும் ரோஹித் அணியில் இருப்பதால் தான் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கோலி சிறந்த கேப்டனாக இருக்க தோனி, ரோஹித் தான் காரணம் : கோலியை சீண்டும் கம்பீர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் “கேப்டனாக கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டிய காலம் உள்ளது. கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் இன்னும் அவர் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க தூரம் இருக்கிறது.

கோலி சிறந்த கேப்டனாக இருக்க தோனி, ரோஹித் தான் காரணம் : கோலியை சீண்டும் கம்பீர்

கோலி தற்போது ஒரு நாள் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்றால் அவர் அணியில் ரோஹித் சர்மா, தோனி இருந்திருக்கின்றனர். உங்களுடன் ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும்.

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் என்ன சாதித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதனையும் பெங்களூரு அணிக்காக கோலி என்ன சாதித்தார் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்'' எனத் தெரிவித்தார். கம்பீர் கோலியின் கேப்டன்ஷிப்பை சாடுவது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories