விளையாட்டு

மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி!

தஜிகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி எட்டியுள்ளார்.

மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா - தஜிகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. 2-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி2 கோல்களை அடித்தார். இதன்மூலம், அதிககோல் அடித்தவர்கள் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 70 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் 68 கோல்களுடன் மெஸ்ஸி உள்ளார். முதலிடத்தில் உள்ள போர்ச்சுக்கல் அணி வீரர் ரொனால்டோ 88 கோல்கள் அடித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியல் !

* கிறிஸ்டியானோ ரொனால்டோ

* சுனில் சேத்ரி

* லியோனல் மெஸ்ஸி

* டேவிட் வில்லா

* எடின் டீகோ

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால், அதற்குப் பின்னர் மெஸ்ஸி சில போட்டிகளில் விளையாடி கோல்கள் அடித்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். இந்நிலையில், தற்போது மீண்டும் மெஸ்ஸியை சுனில் சேத்ரி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

banner

Related Stories

Related Stories