விளையாட்டு

தோனியின் கிளவுஸில் உள்ள முத்திரையை நீக்கச் சொன்ன ஐ.சி.சி : கொதித்தெழுந்த ரசிகர்கள் !

தென்னாப்பிரிக்கப் போட்டியில் தோனி அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தின் முத்திரை போன்ற ஒன்று பொறிக்கப்பட்டு இருந்தது. அதை நீக்குமாறு ஐ.சி.சி கூறியது. இதற்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தோனியின் கிளவுஸில் உள்ள முத்திரையை நீக்கச் சொன்ன ஐ.சி.சி : கொதித்தெழுந்த ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12 வது உலகக்கோப்பை தொடர் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கீப்பிங் கிளவுஸ் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தோனி அணிந்திருந்த அந்த கீப்பிங் கிளவுஸில் ராணுவத்தின் முத்திரைப் போன்ற ஒன்று பொறிக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலர், ட்விட்டரில் விவாதிக்கத் தொடங்கினர். ஒருபுறம் ரசிகர்கள் பாராட்டியும் வந்தனர். இந்நிலையில், தோனியின் கிளவுஸில் இருக்கும் அந்த முத்திரை நீக்கப்பட வேண்டும் என்று ஐ.சி.சி கூறியுது.

பி.சி.சி.ஐ அமைப்பின் வினோத் ராய், “தோனி, கிளவுஸில் வைத்திருக்கும் முத்திரை ராணுவத்தினுடையது அல்ல. மேலும், அந்த முத்திரையை பயன்படுத்த அவர் சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐ.சி.சி-யிடம் அனுமதி வாங்கிவிட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மேலும், “கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம், மதம் அல்லது ராணுவம் சார்ந்து எவ்வித முத்திரையையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரை அப்படி எதையும் சேர்ந்ததில்லை. ஆகையால் தோனி எந்தவித விதிமுறையையும் இங்கு மீறவில்லை” என்று விளக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, இந்திய துணை ராணுவப் படையில் கௌரவ லெஃப்டெனென்ட் கர்ணல் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஐ.சி.சி-யின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரசிகர்கள் ஐ.சி.சி -க்கு தங்களது கடும் எதிர்ப்பை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories