அரசியல்

“வெத்துவேட்டு, சீன் ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

“வெத்துவேட்டு, சீன் ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னையில் இன்று (நவ.16) தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில், மணமக்கள் விஷால் நாராயண் – ரிஷா ஆகியோரின் திருமணத்திற்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

நிகழ்வில் பேசிய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “இன்றைக்கும் அவரது மாவட்டத்தில் கே.என்.நேருதான் அமைச்சராக இருக்கிறார் என்கிறார்கள். அதேபோல், என்னையும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் கே.என்.நேருதான் அமைச்சராக இருக்கிறார், நான்தான் முதலமைச்சராக இருக்கிறேன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அந்த அளவிற்கு த.வெ.க ஆட்சி மோசமாக உள்ளது!”

முத்தமிழறிஞர் கலைஞரையும், கே.என்.நேருவையும் பிரிக்க முடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்ததைப் போல, என்னையும் நேருவையும் பிரிக்க முடியாது என்று பெருமையுடன் சொல்வேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகு கழகம் நிலைத்திருக்குமா, கட்சி தொடருமா எனக் கனவு கண்டவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, கழகம் வெற்றி நடைபோடுகிறது என்றால், அதற்கு தனிப்பட்ட மு.க.ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல; கே.என்.நேரு போன்றவர்களும் காரணம்.

கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மாநாட்டை நடத்திக் காட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர் கே.என்.நேரு. மாநாடு என்றால் கே.என்.நேரு; கே.என்.நேரு என்றால் மாநாடு. தனது உழைப்பிற்கு அடையாளமாகப் பல பணிகளைச் செய்திருக்கிறார். 40 ஆண்டுகளாகக் கழகத்திற்காக உழைத்திருக்கிறார். கோபக்காரர், வேகமாகப் பேசுவார் என்பது உண்மை. ஆனால், அவரது கோபத்தில் அன்பும் பாசமும் இருக்கும்.

“வெத்துவேட்டு, சீன் ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இப்போதும் நான் முதலமைச்சர் என்று இனி சொல்லாதீர்கள். இந்தச் சீர்கெட்ட ஆட்சி முடிவுக்கு வரும். நம்பிக்கையோடு இருங்கள்; திமுக ஆட்சி உதயமாகும். விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட்டு, சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்.

மாற்றம், மாற்றம் என்றார்கள். ஆனால், மிகப்பெரிய ஏமாற்றமாகத்தான் இந்த ஆட்சி இருக்கிறது. சினிமாவில் ஹீரோவாகவும், நிஜத்தில் வில்லனாகவும் உலா வந்துகொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவற்றில் பெரும்பாலான குற்றவாளிகள் தவெகவினராக உள்ளனர். அண்மையில், பாலியல் புகாரில் சிக்கிய தவெக நிர்வாகி தலைமறைவாகியுள்ளார். தவெக என்பதற்குப் பதிலாக ‘பாலியல் சுரண்டல் கழகம்’ எனப் பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.

மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபாச குறுஞ்செய்தியை தவெக எம்.எல்.ஏ அனுப்பியிருக்கிறார். மனு கொடுக்க வந்தவரைத் துணை சபாநாயகர் அடித்திருக்கிறார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்கிறார். மற்றொரு அமைச்சரோ புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்கிறார். இத்தகைய அவலங்களுக்கு முடிவுகட்ட நாம் தயாராக இருக்க வேண்டும்.

நம்பிக்கையோடு இருங்கள்; விரைவில் திமுக ஆட்சி உதயமாகும். தவெக ஆட்சிக்கு முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய உள்ளது. நாம் தயாராக இருக்க வேண்டும், என்றார்.

banner

Related Stories

Related Stories