அரசியல்

த.வெ.க. MLA அருள் விக்னேஷின் விபரீத செயல்.. 7 நாட்களில் ரிப்போர்ட் வேண்டும்.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

த.வெ.க. MLA அருள் விக்னேஷின் விபரீத செயல்.. 7 நாட்களில் ரிப்போர்ட் வேண்டும்.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா அவர்களுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பியதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women - NCW) தானாக முன்வந்து இந்த விவகாரத்தைக் விசாரணைக்கு எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவி விஜயா ரஹாத்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் முன்னரும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும், எவ்வித அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (Action Taken Report - ATR) 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் கோரியுள்ளது.

பொதுப் பணியில் உள்ள பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலன் எவ்வித விதிவிலக்கும் இன்றி உறுதி செய்யப்பட வேண்டும். எத்தகைய பதவியோ அல்லது செல்வாக்கோ, துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் ஒருவரைப் காப்பாற்ற முடியாது, என கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

மிகவும் பூதாகரமாகியுள்ள இந்த விவகாரத்தில் இப்போதாவது முதலமைச்சர் மவுனம் கலைப்பாரா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பெண் மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இவர்களின் அதிகாரத்தொனி எவ்வளவு தூரம் பாயும் என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது. இவ்விவகாரத்தி முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற உயர் அதிகாரிகளையே சீண்டிப் பார்க்கும் நிலை மாறி, சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

banner

Related Stories

Related Stories