இந்தியா

Mad Sandhu கொலை வழக்கு : அமிதாப் பச்சனும் Target.. 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்!

Mad Sandhu கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடைபெற்ற விசாரணையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனையும் கொலை திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Mad Sandhu கொலை வழக்கு : அமிதாப் பச்சனும் Target.. 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர் Mad Sandhu என்று அறியப்படும் மதுசூதன் சந்து (29). பிரபல மேக்அப் கலைஞரான இவர், LGBTQ ஆதரவளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், கடந்த அக்.3-ம் தேதி பைக்கில் வந்த மர்ம கும்பல் இவரை பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் கொலையாளிகளை கண்டறிய தீவிர முனைப்பு காட்டினர். இந்த வழக்கில் ஏற்கனவே சுமார் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று (நவ.2) மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விகாஸ் தாகூர் என்கிற விக்கி (25) மற்றும் தீபக் சிங் என்கிற தீப் ஆகிய 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

Mad Sandhu
Mad Sandhu

அந்த இரண்டு பேரும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனையும், பிரபல தொழிலதிபர் ஒருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்தனர். 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து அமிதாப் பச்சன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், பழிவாங்கும் நோக்கில் இந்த கும்பல் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர்.

Mad Sandhu கொலை வழக்கு : அமிதாப் பச்சனும் Target.. 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்!

மேலும் வெளிநாட்டில் உள்ள ஒரு ரவுடியின் அறிவுறுத்தலின் பேரில், தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக விகாஸ் மும்பையிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்துள்ளார். அவரது கூட்டாளியான தீப் அமிதாப் பச்சனை கொலை செய்வதற்காக மும்பையில் இருந்துள்ளார்.

Mad Sandhu கொலை வழக்கு : அமிதாப் பச்சனும் Target.. 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து ஷாக்!

அந்த சமயத்தில் டெல்லி போலீசார் விகாஸையும், மும்பை போலீசார் தீப்பையும் கைது செய்துள்ளனர். தீப்பிடம் நடைபெற்ற விசாரணையில், அமிர்தசரஸில் கடந்த அக்.3 அன்று மேட் சந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடானது, தனது கூட்டாளியான பல்விந்தர் என்ற காக்காவுடன் சேர்ந்து நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பல்விந்தர் ஏற்கனவே பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவரது வாக்குமூலம் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது.

மேட் சந்து கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடித்து விசாரித்ததில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உயிருக்கும் ஆபத்து இருப்பது தெரியவந்த நிலையில், மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories