
ஆண்டுதோறும் தீபாவளி ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா கொண்டாடுவது வழக்கம். 6 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் போது பக்தர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து, 6-ம் நாளில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு தங்கள் விரதத்தை முடிப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று (நவ.15) கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டது.
அப்போது முருகரின் அறுபடை வீடுகளிலும் முக்கியமாக திருச்செந்தூரில் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான பாடகர் வேல்முருகன் பங்கேற்று நேரலை வர்ணனை வழங்கினார். இந்த நேரலையின்போது பக்தர்களுக்கு முருகரின் செயல்கள், சூரசம்ஹார நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

அப்போது அவர், "முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!" என்று கூறியதோடு, "முதல்வர் விஜய்க்கு அரோகரா! அமைச்சர் ரமேஷ்க்கு அரோகரா!" என்று கூறியுள்ளதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆன்மிக நிகழ்வின் வர்ணனையின்போது அரசியல் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியது தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இவர் மட்டுமின்றி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமியும், இவ்வாறு கூறியுள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சரி, வந்த பின்பும் சரி சட்டத்தையும் மதிப்பதில்லை, தங்கள் கட்சி தலைமையையும் மதிப்பதில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் நிகழ்வும் சட்ட ஒழுங்கு பிரச்சினையில் பெரும்பாலானவைகளில் தவெக-வினரே ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டையும் சட்டத்தையும் மதிக்காத தவெக-வினர், தற்போது ஆன்மிகத்தையும் கடவுளையும் தவெக அவமானப்படுத்தியுள்ளதாக பக்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
முருகனுக்கான சூரசம்ஹாராமா..? அல்லது இவருக்கு வாய்ப்பு தந்தவர்களுக்கு புகழ்பாடும் இடமா இது..? இந்த கோஷங்கள் போட சொல்லி மேலிடம் தந்த அழுத்தமா?" என்று இணையவாசிகள் பலரும் கேள்விகளோடு தங்கள் வண்மையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.






