அரசியல்

“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!

லஞ்ச கொடுத்த விவகாரம் தொடர்பாக தவெக அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,“ இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை அதனை காலை முதல் என்ன புதுத்திட்டங்களை கொண்டு வருகிறார்கள் என பார்த்தோம்..?

நாவோதைய பள்ளி குறித்து நமக்கு தேவையா இல்லையா என்பது குறித்து தவெக அரசு தாக்கல் செய்த (affidavit) மனுவில் திமுக சாதனைகளை பட்டியல் போட்டு தெரிவித்துள்ளது. அதுவே நம் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.

அம்பேத்கர் பெயரிலான திட்டத்தில் வெளிநாடுகளில் 385க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெற்றனர் , மலேசியாசியாவில் பயிலும் மாணவர் அமைச்சர் வன்னியரசிடம் கோரிக்கை வைத்தார் அவரும் முறையாக தொடர்புக்கொள்ளவில்லை என்கிறார் ஆனால் அம்மாணவர் திமுக அரசில் முறையாக தொகை வந்தது ஆனால் இப்போது வரவில்லை தொடர்புக்கொண்டது குறித்து தெரிவித்தப்பின்பு நடவடிக்கைகள் இல்லை.

Uk விசாவில் இருக்கும் மாற்றத்தால் மாநில அரசின் திட்டம் உதவி தொகையை ஏற்கமுடியாது இந்திய அரசின் ஒப்புதல் தேவை என தெரிவித்துள்ளனர் அதற்கு தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார் திராவிட மாடல் அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளது திமுக பிள்ளைகள் அல்ல அனைவருக்குமான திட்டங்கள் அவை.

பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பள்ளிக்கல்வித்துறை பலத்துறைகள் உள்ளன மேலும் தமிழ்வளர்ச்சித்துறை செய்தித்துறை கொடுத்துள்ளார்கள் நிச்சயமாக அந்த அமைச்சருக்கு அது சுமையாக இருக்கும் என தெரியும், பள்ளிக்கல்வித்துறை என சிறப்பாக கவனம் செலுத்தினால் மட்டுமே அதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

சேலத்தில் வட மாநில ஆசிரியர் நியமித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது 100 நாட்களில் எல்லாமே செய்யமுடியுமா என்றால் நிச்சயம் நேரம் தேவை தான் என்பதை அறிவோம்.

திமுக ஆட்சியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அனைத்தையும் செயல்படுத்தி காட்டியுள்ளோம் 100 நாள் தான் ஆகுது என்று excuse நீங்கள் கேட்க முடியாது.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் பின்பற்றினாலே போது நமது மாணவர்கள் பல்வேறு சாதனைகளை புரிவார்கள் என கூறினார்.

மேலும் என்னதான் முதலீடுகள் வேலைகள் வந்தாலும் துவக்கத்திலிருந்து பள்ளியில் முறையான கல்விக்கொடுத்தால் தான் வேலை வாய்ப்புகளை பெறமுடியும்.

சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் பேசியது தொடர்பாக கேள்விக்கு, அமைச்சர் மரியவில்சன் நானே சாட்சி என்று பேசுகிறார் கொடுத்தேன் கொடுத்தேன் என்கிறார் சட்டப்பேரவையில் பேசினால் அவர் தான் பொறுப்பு.

“மடைமாற்றும் அரசு.. அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் : அன்பில் மகேஸ் அதிரடி!

என் மீது ஒருவர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மீது 50 கோடி நஷ்ட ஈடுக்கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டுள்ளது. அன்புமொழி கருணைமொழி தான் தெரியும் என்னும் அமைச்சர், அன்பில் மகேஷ் மீது இப்படி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அவர் லஞ்சம் கொடுத்தது தவறு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு அமைச்சராக இருந்து நானே சாட்சி என தெரிவிக்கிறார். அவர் மீது DVAC புகார் கொடுத்து அவரிடம் விசாரிக்க வேண்டும்.

இந்த அரசு மடைமாற்றம் செய்வதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள், நீட் தேர்வு மரணம், சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு,இடதுசாரிகள் போராட்டம் நடைபெறாமல் இருக்க சுற்றறிக்கை அனுப்புகிறார்கள்.

எங்கள் ஆதரவால் இந்த அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் இந்த அரசை தலைமைச் செயலாளர் நடத்துகிறார் என இடதுசாரி கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்...?

முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவார் என சட்டமன்றத்தில் ரசிகர் மனநிலையில் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் பேசுவதாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறுகிறார். கூட்டணியில் இருக்கும் சலசலப்பை மடைமாற்றம் செய்வதற்கு இப்படி பேசுகிறார்கள்.

குறிப்பாக அமைச்சர் சம்பந்தமே இல்லாத ஒரு குற்றச்சாட்டை என் மீது வைக்கிறார், ஏழை மாணவர்களிடம் பணவாங்கி கல்லூரி நடத்துபவர் என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது வேதனையாக உள்ளது அவர் எதை சொன்னாலும் அதனை எதிர்த்து நிற்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

கடந்த 3 மாதங்களாக பார்க்கிறேன் சட்டமன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் பேசுகிறார்கள்..

ஒன்றிய அரசே பாராட்டும் அளவிற்கு நாம் செயல்பட்டோம் சிறந்த கல்வி அறிவு பெற்ற மாநிலத்தில் தற்போது 19 % என்ற அளவில் இருக்கிறோம் அடுத்த ஆறு மாதத்தில் தமிழகம் கல்வி அறிவில் 100% பெறுவார்கள் அதற்கும் திராவிட மாடல் அரசு தான் காரணம்.

சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் பேசியதை எப்படி அனுமதித்தார்கள் அவை முன்னவர் எப்படி அனுமதித்தார்?

உரிய விளக்கத்தை சட்டப்பேரவை தலைவர் கேட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories