அரசியல்

“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!

“தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன.”

“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக நிலவிவரும் உச்சக்கட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குற்றச் சம்பவங்களுக்கு இடையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

நாள்தோறும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், மாநிலத்திற்கான நதி நீர் உரிமையை பறிக்கும் மேகதாது அணை அமைக்க கர்நாடக அரசு மும்முரம் காட்டி வரும் நிலையிலும், எதையுமே ஒரு பொருட்டாக எண்ணாது செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய், தனக்கே உரிய அமைதிப் புரட்சியை மேற்கொண்டு வருகிறார்.

இதனைக் கண்டித்து இன்று சட்டப்பேரவை வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் “வாயத் திறங்க CM!” என்ற பட்டையை அணிந்து வந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் சோஃபா மாடல் அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.

“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!

தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம்.

எப்போதாவது வாய் திறக்கும் விஜய், தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து இன்னும் பிரச்சார மோடிலேயே பேசிக்கொண்டிருக்கிறார். முதலமைச்சரே இப்படி என்றால், அமைச்சர்களும் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களும் ரீல்ஸ் வெறியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதை விட, எல்லாமே இவர்களுக்கு ரீல்ஸ்தான்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று இன்றைய முதலமைச்சர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் எப்படியெல்லாம் வீர வசனங்கள் பேசினார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

அன்றைக்கு முதலமைச்சரைப் பார்த்து கேள்வி கேட்ட விஜய், இன்று கண்ணாடியைப் பார்த்து அதே கேள்விகளை கேட்டுக்கொள்வாரா? வேலியே பயிரை மேய்ந்த கதையாக, த.வெ.க நிர்வாகிகளே பல்வேறு குற்றச்சம்பவங்களில் கைதாகியுள்ளார்கள். இதுகுறித்து விஜய் பேசுவாரா?

“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது தொடர்பாக ஆளுநர் உரையில் ஒரு வரிகூட இடம்பெறவில்லை.

நல்லத் திட்டங்களை கெடுக்கும் நோக்கில் செயல்படுவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ‘நான் முதல்வன்’ திட்டத்தை முடக்கும் நோக்கில் இந்த அரசு செயல்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ என்றாலே மு.க.ஸ்டாலின் நினைவுக்கு வருகிறார் என்பதற்காகவே அந்த பெயரை நீக்கியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களின் சாதனைகள் தொடர்பான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.

இப்படி தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் நடந்துகொண்டிருந்தாலும், முதலமைச்சர் கோட் - சூட் போட்டு வருகிறார், டிபன் பாக்ஸில் உணவு சாப்பிடுகிறார், அவர் கையால் அவரே சாப்பிடுகிறார் என்பதையே தவெக virtual abusers சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள்.

அதனால்தான், மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் எப்போது வாய் திறப்பார் என்ற கேள்வியை எழுப்பும் வகையில் நாங்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories