அரசியல்

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு நீதிபதிகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நீதிபதி விபுல் பஞ்சோலியை நியமிக்க கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவருக்கு மேல் 3 சீனியர் பெண் நீதிபதிகள் இருந்தும் அவர்கள் பரிசீலிக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையானது. உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் தற்போது ஒரே ஒரு பெண் நீதிபதியாக நாகரத்னா மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற பார்க்கவுன்சில் கூடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. அதில் பெண் நீதிபதிகள் நியமனம் மிக மிக குறைவாக உள்ளது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றங்களில் தற்போது 670 ஆண் நீதிபதிகள் பணியாற்றும் நிலையில் 103 பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றும், மணிப்பூர், உத்தராகண்ட், திரிபுரா, மேகாலயா உயர் நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாலியல் பாகுபாட்டை நீக்கி நிதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும், சமூகத்தின் பன்முகத்தனையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல அடுத்து வர இருக்கும் நியமனங்களில் அதிகமான பெண் நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கொலிஜியம் அவசர கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories