இந்தியா

விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) பணியாற்றிய ஒரு மூத்த மேலாளர், சுமார் ரூ. 232 கோடி அளவிலான பொது நிதியை முறைகேடாக தன் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அவரை கைது செய்துள்ளது.

சிபிஐயின் விசாரணையில், 2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் டேராடூன் விமான நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தபோது, அந்த மேலாளர் போலி மற்றும் இரட்டை கணக்குகளை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் சொத்துகளின் மதிப்பை அதிகரித்து, போலி ஆவணங்களைத் தயாரித்து நிதியை தன் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

இத்தகைய நிதி முறைகேடுகள் அவர் பொதுமக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்ததைக் உறுதிப்படுத்துகிறது. இந்த முறைகேடு தொடர்பாக, ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, இந்த ஊழலை உறுதிப்படுத்தும் பல முக்கிய ஆவணங்கள், சொத்து மதிப்புச் சான்றுகள், மற்றும் பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த நிதி, பல்வேறு வர்த்தக கணக்குகளுக்கும் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த மேலாளர் கைது செய்யப்பட்டு, இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories