அரசியல்

“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!

“பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படும் நிலை என்ன?” என தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி!

“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், ஜூலை 21 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இறுதி நாளான நேற்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், “பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படும் நிலை என்ன?” என கனிமொழி எம்.பி. கேள்வி!

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்பி. மக்களவையில் எழுத்துபூர்வ கேள்விகளை எழுப்பினார்.

“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!

“பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) தொடங்கப்பட்டதிலிருந்து, மாநில வாரியாக, குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்திற்கு… அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன?

முக்கிய தொழில்துறை மாநிலமான தமிழ்நாட்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) செயல்திறனை ஒன்றிய அரசு மதிப்பீடு செய்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) எண்ணிக்கை மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள் என்ன?

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் MSMEகளை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? எடுக்கப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்கள் என்ன?

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லையெனில் அதற்கான காரணங்கள் யாவை?” என்று கனிமொழி எம்.பி. கேள்விகள் கேட்டிருந்தார்.

banner

Related Stories

Related Stories