அரசியல்

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் -  உச்ச நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் -  உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரத்தை வெளியிடவேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரத்தை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார்? இறந்தவர்கள், புலம் பெயர்ந்த வாக்காளர்கள் என்ற காரணத்தை குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும். நீக்கப்பட்டதற்கான காரணத்தை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories