அரசியல்

நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!

நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

நேரில் வந்த உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர்- உச்சநீதிமன்றத்தில் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டு விலாசத்தில் இந்து, முஸ்லீம் உள்ளிட்ட பல்வேறு வகுப்பினர் 16 பேர் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல ஏராளமான குறைபாடுகளை பீகார் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் இன்று இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, உயிரிழந்துவிட்டதாக நீக்கப்பட்ட பெண் வாக்காளர் ஒருவரை உச்ச நீதிமன்றத்தில் நேரில் கொண்டுவந்து நிறுத்தி தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் அம்பலப்படுத்தினார் .

banner

Related Stories

Related Stories