அரசியல்

334 அரசியல் கட்சிகள் நீக்கம்... தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !

அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

334 அரசியல் கட்சிகள் நீக்கம்...  தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அரசியல் கட்சி தொடங்கி ஆறு ஆண்டுகள் தேர்தல் களத்தில் பங்கு பெறாத, மற்றும் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் போது வழங்கிய அலுவகத்தில் இயங்காத அரசியல் கட்சியை அடையாளம் கண்டு அதன் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

334 அரசியல் கட்சிகள் நீக்கம்...  தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !

இதில் தமிழ்நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்ட 22 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் அடங்கும். இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் கூட அவர்கள் அளித்த முகவரியில் எங்கேயும் இருக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே நேரம். இந்த அறிவிப்பில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அடுத்த 30 நாட்களில் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தற்போது நாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories