தமிழ்நாடு

"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தாம்பரம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்து, நீண்ட நாள் வீட்டு பட்டா இல்லாத பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கினார்.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதாது, நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும் எனத் தனிக்கவனம் செலுத்தி வருகிறேன்.

"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

20,021 பயனாளிகளுக்கு ரூ. 1672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று வழங்கினேன். நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதில் இருந்து மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிக் கோடிக்கணக்கான மக்களின் நெடுநாள் கனவுக்கு உயிரூட்டி இருக்கிறோம்! இப்பணி தொடரும்!

முன்னதாக,தாம்பரத்தில் 400 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை மையங்கள், குழந்தைகள் நலப் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் 115 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ஒருங்கிணைந்த பொதுகாதார மையம் மற்றும் 3 நகர்ப்புறத் துணை சுகாதார மையங்களையும் திறந்து வைத்தேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories