அரசியல்

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்பிய வதந்தி : TN Fact Check விளக்கம்!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினரால் தமிழ்நாடு அரசின் மீது தொடர்ந்து பொய் பரப்பல் செய்யப்படும் நிலையில், அதனை பொய் என்று நிரூபித்து விளக்கியுள்ளது தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம்.

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்பிய வதந்தி : TN Fact Check விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களை விமர்சித்ததற்காக பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது பொய் என்று தெரிவித்து தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் அளித்த விளக்கம் பின்வருமாறு,

பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விமர்சித்ததற்காக தமிழ்நாடு பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளர்.

இது முற்றிலும் தவறான தகவல். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள திருவாலங்காடு பகுதியில் இரயில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவத்தை தமிழர்களை கொல்லச் சதி என்றும் , இஸ்லாமியர்கள் செய்ததாகப் பொருள்படும்படி பிரவீன் ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்பிய வதந்தி : TN Fact Check விளக்கம்!

ஆனால், இரயில் தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரகாண்ட் சாமியார் ஓம் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இப்படி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பகிர்வதன் மூலம் பொதுமக்களிடையே பதற்றத்தை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பதிவிட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டதாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories