அரசியல்

"முதலமைச்சர் தினமும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்"- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

"முதலமைச்சர் தினமும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்"- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் இன்று (23.06.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில், 2100 பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும், 84 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அடித்தட்டு மக்களை மேலே துக்கி விடுவதற்காகவே தமிழ்நாடு அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. எனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக இன்று பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளுக்கும் ஒரு வேலை இருக்கிறது. அதிலும் இந்த துறை மிகவும் முக்கியமான துறையாக இருக்கிறது. ஒரு துறை வெளியில் தெரிய வேண்டுமென்றால், அந்த துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற முயற்சியால் தான் தெரியும். அந்த வகையில் எண்ணற்ற திட்ட பயன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

"முதலமைச்சர் தினமும் ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்"- அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பில், பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகிறது.அதனடிப்படையில் இன்று, சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 2100 பயனாளிகளுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 48 பயனாளிகளுக்கு ரூ.3,21,600/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.28,000/- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 1 பயனாளிக்கு ரூ.1,500/- மதிப்பிலான கல்வி உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு ரூ.3,31,200/- மதிப்பிலான முதியோர் ஓய்வூதியத்தொகையும், 1 பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.35,000/- மதப்பில் ஈமச்சடங்கு உதவிதொகையும், மற்றும் 6 பயனாளிகளுக்கு ரூ.14,24763/- மதிப்பிலான டாப்செட்கோ தனிநபர் கடன் உதவித்தொகையும் என மொத்தம் 2184 பயனாளிகளுக்கு ரூ.21.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையிலும், இது தெரிவதன் மூலமாக அனைவரும் இதில் உறுப்பினராவதற்கும் ஒரு வாய்ப்பினை நமக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்" என கூறினார்.

banner

Related Stories

Related Stories