அரசியல்

“ஏழைகள் ஆங்கிலம் கற்பதை விரும்பாத பா.ஜ.க!” : அமித்ஷா பேச்சிற்கு ராகுல் காந்தி கண்டனம்!

“இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் தொன்மை வாய்ந்தது, அறிவு சார்ந்தது. நம் மொழிகளை நாம் கொண்டாடும் வேளையில், ஆங்கிலத்தை கற்பதும் இன்றியமையாதது.”

“ஏழைகள் ஆங்கிலம் கற்பதை விரும்பாத பா.ஜ.க!” : அமித்ஷா பேச்சிற்கு ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினர் இந்திய மொழிகளை வளர்ப்பதைக் காட்டிலும், இந்தியை வளர்ப்பதையும், சமஸ்கிருதத்தை திணிப்பதையும்தான் முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.

அதனை உறுதி செய்யும் வகையில்தான், ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும், கல்வி கொள்கைகளும் அமைந்துள்ளன. அரசு சார்ந்த திணிப்பு ஒருபுறம் நடக்க, ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுகளில் இடம்பெறும் திணிப்புகள் மறுபுறம் தலைதூக்கி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜூன் 19) நடந்த முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அஷுதோசின் புத்தக வெளியீட்டு விழாவில், “இந்திய நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிவரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

“ஏழைகள் ஆங்கிலம் கற்பதை விரும்பாத பா.ஜ.க!” : அமித்ஷா பேச்சிற்கு ராகுல் காந்தி கண்டனம்!

இதற்கு பதிலடி தரும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஆங்கிலம் என்பது தடுப்பணை அல்ல, பாலம். ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல, அதிகாரம். ஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல, சங்கிலியை அறுக்கும் கருவி.

இந்தியாவின் ஏழை, எளிய குழந்தைகள் ஆங்கிலம் கற்பது பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்களுக்கு அனைவரும் சமமாக இருப்பதும், அவர்களை கேள்வி கேட்பதும் பிடிக்காது.

இன்றைய காலகட்டத்தில் தாய் மொழி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆங்கிலமும் முக்கியமாக இருக்கிறது. வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் மொழியாக இருக்கிறது.

இந்தியாவின் ஒவ்வொரு மொழியும் தொன்மை வாய்ந்தது, அறிவு சார்ந்தது. நம் மொழிகளை நாம் கொண்டாடும் வேளையில், ஆங்கிலத்தை கற்பதும் இன்றியமையாதது.

இந்த வழியில்தான், இந்தியா உலக நாடுகளுடன் போட்டியிட முடியும். நம் குழந்தைகள் சமமான வாய்ப்புகளை பெறமுடியும்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories