அரசியல்

தமிழரின் தொன்மையை காக்க நாளை (ஜூன் 18) மாபெரும் ஆர்ப்பாட்டம்! - கழக மாணவரணி அழைப்பு!

“ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!”

தமிழரின் தொன்மையை காக்க நாளை (ஜூன் 18) மாபெரும் ஆர்ப்பாட்டம்! - கழக மாணவரணி அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழர்களின் தொன்மையை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கழக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவித்திருந்தார்.

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம்.

ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது!!

நாளை (ஜூன் 18) மதுரை விரகனூரில் கழக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிடவேண்டும்!

ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!” என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories