தமிழ்நாடு

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மகன் கைது! : ரூ.17 கோடி மோசடி வழக்கில் நடவடிக்கை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜாவை, ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மகன் கைது! : ரூ.17 கோடி மோசடி வழக்கில் நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜாவை, ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்ததுள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை.

கைது செய்யப்பட்டுள்ள ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திருமதி.பொன்னரசி, பெ/38, க/பெ.அசோக் குமார் என்பலர் கொடுத்த புகாரில் தனது சொந்த தம்பியும் தூத்துக்குடி மாநகராட்சியில் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் ராஜா, ஆ/வ35, த/பெ.சண்முகநாதன் மற்றும் அவரது மனைவியான அனுஷா ஆகியோர் அவர்களது M/s. Omeena Pharma Distributors Pvt.Ltd நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 % பங்குகள் தருவதாக கூறி அதற்கென தனது கணவருக்கு சொந்தமான ஶ்ரீ பெரும்புதூர், நந்தம் பாக்கத்தில் உள்ள 2 ஏக்கர் சொத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்து மேற்படி நிறுவனத்தின் பெயரில் ரூ. 11 கோடிகள் வங்கி கடன் பெற்றுள்ளனர்.

பின்னர் அந்த பணத்தை தனக்கு தெரியாமல் ராஜாவின் மற்றொரு நிறுவனமான M/s. Ashun Exim என்ற நிறுவனத்திற்கு மாற்றி கொண்டதாகயும், மேலும் ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் M/s Golden Blue Metals Pvt Ltd என்ற பெயரில், கல்குவாரி தொழில் துவங்க இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் இருந்து முதலீடாக 300 சவரன் நகைகளை பெற்று கொண்டு ராஜா அவரது பெயரில் அடமானம் வைத்து பணம் பெற்று அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தினை அவரது பெயரில் வாங்கியுள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மகன் கைது! : ரூ.17 கோடி மோசடி வழக்கில் நடவடிக்கை!

இந்நிலையில் புகார்தாரருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா கூட்டு சேர்த்து பொண்ணரசி போல் போலியான கையெழுத்துக்கள் போட்டு M/s. Golden Blue Metals Pvt Ltd. நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றி கொண்டும், தான் கொடுத்தது போல ராஜினாமா கடிதம் தயார் செய்து அதனை ROC க்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து தன்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கி விட்டு அதற்கு பதிலாக அனுஷாவை இயக்குநராக நியமித்தார்.

மேலும், தன்னை ரூ. 17 கோடி ஏமாற்றிய ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின் மீது சென்னை மத்தியகுற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் புலன் விசாரணையில் மேற்குறிப்பிட்ட சங்கதிகள் உண்மையென்பது தெரிய வந்ததால் எதிரி எந்த நேரத்திலும் வெளிநாடு சென்று தலைமறைவாகக் கூடும் என்ற காரணத்தால் ராஜாவிற்கு எதிராக LOC கொடுக்கப்பட்டதின் பேரில் கடந்த 10.06.2025 தேதி சென்னை விமான நிலையம் மூலம் மலேசியா நாட்டிற்கு சென்று தலைமறைவாகி விடலாம் என்று சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்த ராஜா மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் காயத்திரி அவர்களின் தலைமையில் கைது செய்யப்பட்டு எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் அவர்கள்முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு உத்தரவின் படி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

banner

Related Stories

Related Stories