அரசியல்

"அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது" - குடியரசுத் துணை தலைவருக்கு திருச்சி சிவா எம்.பி. கண்டனம் !

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துக்கு திமுக எம்.பி திருச்சி சிவா கண்டனம் .

"அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது" - குடியரசுத் துணை தலைவருக்கு திருச்சி சிவா எம்.பி. கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரையறையை நிர்ணயித்தது. இதன் மூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காலவரையின்றி நிறுத்த வாய்த்த ஆளுநர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் அணுகுண்டு என விமர்சித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துக்கு திமுக எம்.பி திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அரசியலமைப்புதான் அனைத்தையும் விட உயர்ந்தது" - குடியரசுத் துணை தலைவருக்கு திருச்சி சிவா எம்.பி. கண்டனம் !

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது.

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை! இந்திய ஒன்றியத்தில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories