அரசியல்

“சண்டிகரில் ரத்து செய்யப்பட்ட ‘புனித வெள்ளி’ விடுமுறை!” : காங்கிரஸ் கண்டனம்!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் துக்க அனுசரிப்பு நாளான புனித வெள்ளி நாளினை, அலுவல் நாளாக அறிவித்துள்ளது பா.ஜ.க அரசு.

“சண்டிகரில் ரத்து செய்யப்பட்ட 
‘புனித வெள்ளி’ விடுமுறை!” : காங்கிரஸ் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மையினர் வஞ்சிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரட்டை இன்சின் (Double Engine) ஆட்சி எனப்படுகிற, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் வஞ்சிப்பு உச்சம் தொட்டுள்ளது.

மதத்தின் பெயரால், சிலருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதும், பலர் புறக்கணிக்கப்படுவதுமான நடவடிக்கைகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்தும் உத்தரப் பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டிய, காவல்துறையினருக்கு இந்து நாட்காட்டி வழங்கப்பட்டு, காலம் பார்த்து வழக்கு விசாரணை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிறப்பால் பிரிவினையை தூண்டும் கருத்துகளை நீதிமன்றங்களே ஆதரித்து வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்ட மாநிலங்களாக திகழும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒரு முதன்மை மாநிலமாகதான் தமிழ்நாடு விளங்கி வருகிறது.

“சண்டிகரில் ரத்து செய்யப்பட்ட 
‘புனித வெள்ளி’ விடுமுறை!” : காங்கிரஸ் கண்டனம்!

இதுபோன்ற சூழலில், “தாங்களும் மத நல்லிணக்கத்தை பேணி வருகிறோம்” என பிரதமர் மோடியால் சித்தரிக்கப்பட்டு வருவதன், பொய் தன்மையும், பிரதமர் மோடியின் உண்மை முகமும் தற்போது பா.ஜ.க அரசின் அறிவிப்பால் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களை வஞ்சிக்க வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வேளையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் துக்க அனுசரிப்பு நாளான புனித வெள்ளி நாளினை, அலுவல் நாளாக அறிவித்துள்ளது பா.ஜ.க அரசு.

ஒரு கோவில் திறக்கப்படும் நாளுக்கு, பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கும் பா.ஜ.க அரசு, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறையை ரத்து செய்தது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க.வின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது. புனித வெள்ளி விடுமுறை ரத்தை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories