இந்தியா

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? : மாநிலங்களவையில் கிரிராஜன் MP கேள்வி!

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என மாநிலங்களவையில் கிரிராஜன் MP கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? : மாநிலங்களவையில் கிரிராஜன் MP கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் உள்நாடு, வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது உண்மையா? அப்படியானால் அதற்கான காரணங்கள் என்ன? என்று நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் ஒன்றிய அரசு எடுத்த முன்முயற்சிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காகவும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கேட்டுள்ளார்.

குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவலையிலுள்ள வழக்குகள்! தீர்வு எப்போது?

நாடு முழுவதும் செயல்படும் குடும்பல நல நீதிமன்றங்களின் எண்ணிகை எவ்வளவு? மாநில வாரியான எண்ணிக்கை என்ன? என்றும் இந்நீதிமன்றங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் மாநிலவாரியான விவரங்கள் என்ன? என்றும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் தீர்வு காண்பதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனவா? அப்படியானால் அதற்காக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் அவர் குறிப்பிட்டு கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories