சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோயில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்பு வழிப்பாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவு உட்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், "ஒன்றிய அரசின் பட்ஜெட் அறிக்கையல் பாரபட்சம்தெரிந்தது. ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு மாதிரி அவர்களின் மைனாரிட்டி ஆட்சியை தக்கவைக்க சப்போர்ட்டாக இருக்கும் பீகார், ஆந்திராவிற்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது போல உள்ளது.
இது இந்தியாவிற்கான நிதிநிலை அறிக்கையாக இல்லை, கூட்டணி கட்சிகளை சரிசெய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை, அவர்களுக்கு எந்தவித திட்டமும் அறிவிக்கவில்லை.
பிரமருக்கு வார்த்தை ஜாலங்கள் தான். அவர் வெறும் வாயால் வடை சுடுகிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகள் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவு ஆட்சி நடத்தி வருகிறோம். மழை பாதிப்பு நிதி உள்ளிட்டவை தமிழக அரசு நிதி வழங்கி ஊக்குவிக்கிறது. அரசு பெண்களுக்கு, மாணவர்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதனால் தனி நபர் வளர்ச்சி உயர்ந்துள்ளது.
புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும், அவர்கள் பெரியார் படத்தை வைத்துதான் மாலை போடுகிறார்கள். எம்.ஜி.ஆர் அதிமுகவும் பெரியார் படத்தை வைத்து தான் அரசியல் செய்வார்கள். பெரியார் பற்றி பேசுபவர்களை மக்கள் பார்த்து கொள்வார்கள்" எனக் கூறினார்.