தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜனவரி 5ஆம் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கி, இன்று 5ஆவது நாளாக நடைபெற்றது.
சட்டப்பேரவையின் 5ஆவது நாளில், தமிழ்நாட்டின் கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டது. அதில் கலந்துகொள்ள வருகை தந்த தி.மு.க.வினர், “இவன் தான் அந்த சார்” புகைப்பட பலகைகளை ஏந்தி வந்தனர்.
இந்நிகழ்வு, கடந்த 4 நாட்களாக “யார் அந்த சார்?” என பேட்ச் அணிந்து வந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடியாக அமைந்தது. “இவன் தான் அந்த சார்!” என அச்சிடப்பட்ட பலகையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அ.தி.மு.க நிர்வாகி சுதாகர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “‘யார் அந்த சார்’ என பேட்ச் அணிந்து நாள்தோறும் சட்டப்பேரவைக்கு வந்து, விடை தெரியாமல் இருந்த அதிமுகவினருக்கு இன்று விடை கொடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.