தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு ரயில்கள் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !

பொங்கல் பண்டிகையொட்டி அறிவைக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்காக டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

பொங்கல் சிறப்பு ரயில்கள் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படம் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தாம்பரம் -திருநெல்வேலி , தாம்பரம் -கன்னியாகுமரி , சென்னை சென்ட்ரல் -கன்னியாகுமரி , தாம்பரம் -திருச்சி , எழும்பூர் -ராமேஸ்வரம் , மைசூர் -தூத்துக்குடி , பெங்களூரு -சென்ட்ரல் என 7 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பொங்கல் சிறப்பு ரயில்கள் : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் !

அதனைத் தொடர்ந்து எழும்பூர் -திருநெல்வேலி , தாம்பரம் -நாகர்கோவில் , சென்ட்ரல் -மதுரை , எழும்பூர் -மதுரை என 4 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது .இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 8:00 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்தது. இதனால் முன்பதிவு செய்யவந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories