அரசியல்

"மத மோதலை உருவாக்கக்கூடிய சூழலை பாஜக உருவாக்கி வருகிறது " -CPIM ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி !

"மத மோதலை உருவாக்கக்கூடிய சூழலை பாஜக உருவாக்கி வருகிறது " -CPIM ஜி.ராமகிருஷ்ணன்  பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணல் அம்பேத்கர் சாதி மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என பாடுபட்டவர். அவரது தலைமையில் அரசியல் சட்டம் வரையறுக்கப்பட்டது. நல்லவர் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டம் நீடித்து நிற்கும்.

"மத மோதலை உருவாக்கக்கூடிய சூழலை பாஜக உருவாக்கி வருகிறது " -CPIM ஜி.ராமகிருஷ்ணன்  பேட்டி !

கெட்டவர் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டம் நீடித்து நிற்காது என அம்பேத்கர் கூறியது தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய பொருளாதாரத்தை அதானி அம்பானி போன்றவர்களுக்கு ஒப்படைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. மத மோதலை உருவாக்கக்கூடிய மோசமான சூழலை பாஜக உருவாக்கி வருகிறது..

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்காலமாக ஒன்றிய அரசாங்கம் நிவாரணத்துக்காக 2000 கோடி ஒதுக்க வேண்டும் என மாநில அரசு கூறி இருக்கிறது. மாநில அரசு கோரிய அந்த நிதியை ஒன்றிய அரசு கொடுத்து உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories