அரசியல்

அதானி ஊழல் குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசு! : நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!

அதானி ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பதாகை ஏந்தி ஆர்பாட்டம்.

அதானி ஊழல் குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசு! : நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் அதிகப்படியான அதிகாரம் கொண்டவர்களும், அதிகப்படியான பணம் கொண்டவர்களும் ஒருவரோடு ஒருவர் கைக்கோர்ப்பதால், இவ்விரண்டும் இல்லாத சராசரி மக்கள் கடும் வஞ்சிப்பு ஆளாகி வருகின்றனர்.

அதற்கு எடுத்துக்காட்டாக தான், ஒன்றிய பா.ஜ.க அரசின் முதலாளித்துவ முன்னெடுப்புகள் அமைந்துள்ளன. தனி மனித வரியை அதிகரித்து, தனியார் நிறுவனங்களுக்கான வரி விழுக்காட்டை குறைத்த பெருமையும் முதலாளித்துவ பா.ஜ.க.வையே சாரும்.

அது போல தான், இந்திய உடைமைகளாக விளங்கும் துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், இராணுவ தளவாடங்கள் என அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன.

இதனால், இந்தியாவின் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர் ஏறுமுகத்திலும், மீதமுள்ள மக்களின் பொருளாதார நிலை தொடர் இறங்குமுகத்திலும் நீடிக்கிறது.

அதானி ஊழல் குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசு! : நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், இந்தியாவின் பிரதமராக விளங்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்குவது மட்டுமல்லாது, குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கவும் செய்யப்படிகின்றன.

குறிப்பாக, அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையிலும், அதானி மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் என இந்தியா கூட்டணி கட்சிகள் கோரிக்கை வைக்கும் வேளையில், நாடாளுமன்ற அவையே முழுவதுமாக ஒத்திவைக்கப்படுகிறது.

இதனால், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களோடு, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களையும் புறக்கணித்து, மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இந்நடவடிக்கை தொடர்ந்து வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (டிசம்பர் 3) அதானி ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பதாகை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories