அரசியல்

"இந்திய எல்லையில் சீனா ஊடுருவி வருவதை தடுக்காத மோடி அரசு" - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !

"இந்திய எல்லையில் சீனா ஊடுருவி வருவதை தடுக்காத மோடி அரசு"  - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் இந்திய பகுதியின் பல இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் இது குறித்து பதிலளிக்க ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் கட்டுப்பட்டில் உள்ள சிரிஜாப் நிலப்பகுதியில் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "இந்திய ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த கல்வான் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு சீனா தொடர்ந்து ஊறு விளைவித்து வருகிறது.

"இந்திய எல்லையில் சீனா ஊடுருவி வருவதை தடுக்காத மோடி அரசு"  - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !

கடந்த ஏப்ரல் 10ம் தேதி பிரதமர் மோடி வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், உலக அரங்கில் இந்தியாவின் எல்லைப் பிரச்சனைகளை வலுவாக முன்வைக்கத் தவறிவிட்டார். ஏப்ரல் 13ம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 4ம் தேதி சீனப்பிரதிநிதியை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசியபோது, இந்தியாவின் கட்டுப்பட்டில் உள்ள சிரிஜாப் நிலப்பகுதியில் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு விவகாரத்தில், முந்தைய நிலை கடைப்பிடிக்காமல் போனதற்கு மோடி அரசாங்கமே பொறுப்பு. டெப்சாங் சமவெளி, டெம்சோக் மற்றும் கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ளிட்ட 65 இடங்களில் 26 ஐ இந்தியா இழந்துவிட்டது. இதற்கு மோடி அரசே பொறுப்பு"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories