அரசியல்

ஒரு தேர்தல் நண்பர்களையும் பிரித்திருக்கிறது : புதிய நாடகத்தை அரங்கேற்றிய மோடி!

இஸ்லாமியர்கள் குறித்து மாறி மாறி பேசிவந்த மோடி, தற்போது அம்பானி, அதானி குறித்தும் மாற்றி பேச தொடங்கியுள்ளார்.

ஒரு தேர்தல் நண்பர்களையும் பிரித்திருக்கிறது : புதிய நாடகத்தை அரங்கேற்றிய மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்கள், இஸ்லாமியர்கள் பொது சொத்துகளை பறித்துக்கொள்வார்கள், இஸ்லாமியர்கள் OBC மக்களின் உரிமைகளை பறிக்கின்றனர் என தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டுமே பேசி வரும் பிரதமர் மோடி,

Times Now ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை” என அப்பட்டமாக மாற்றி பேசியது மிகவும் சர்ச்சையானது.

இந்நிலையில், இஸ்லாமியர்களையடுத்து, தற்போது தனக்கு மிகவும் நெருக்கமான அம்பானி மற்றும் அதானியை குறித்தும் மாற்றி பேசுயுள்ளார் மோடி.

மோடி பிரதமர் வேட்பாளராக 2014-ல் முதன் முதலில் இந்தியா முழுக்க பிரச்சாரம் மேற்கொண்ட போது, அதற்கான மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொண்டவர் அம்பானி.

இந்தியாவின் பொது சொத்துகள் எனப்படும், ராணுவ தளங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் என பலதை அதானிக்கு வாரி வழங்கியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சில மாதங்களுக்கு முன் குஜராத்தில் நடந்த பன்னாட்டு உச்சி மாநாட்டில், அதானியும், அம்பானியும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடுகளை அறிவித்ததற்கு முதன்மை காரணம், அம்பானி, அதானி மற்றும் மோடி ஆகிய மூவருக்கும் சொந்த மாநிலம் குஜராத் என்பது தான்.

இவ்வாறு, இதுவரை ஒன்றி பிணைந்து இருந்து வந்த மோடிக்கும், அம்பானி - அதானி முதலாளிகளுக்கும் இடையில் தற்போது விரிசல் விழத்தொடங்கியுது போன்ற புதிய நாடகத்தை நடத்தியுள்ளார் மோடி.

ஒரு தேர்தல் நண்பர்களையும் பிரித்திருக்கிறது : புதிய நாடகத்தை அரங்கேற்றிய மோடி!

அதன் படி, தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, “தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி அம்பானி, அதானியை பற்றி பேச மறுக்கிறது? என்ன காரணம்? அவர்களிடமிருந்து இந்த தேர்தலுக்கு எவ்வளவு கறுப்பு பணத்தை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்கிறது?” என பேசியுள்ளார்.

அதற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காலம் மாறுகிறது. நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது நண்பர்களாக இல்லை. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் பிரதமர், அவரின் நண்பர்களை தாக்கத் தொடங்கியிருக்கிறார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பது தெளிவாக தெரிகிறது” என்றும்,

ஊடகவியலாளர் அனுஷா ரவி, “மோடி காங்கிரஸையும், அம்பானி - அதானியையும் தொடர்பு படுத்தி பேசியதற்கு ஒரு நாள் முன்பு தான் ‘அதானிக்கும் அம்பானிக்கும் மோடி வேலை பார்க்கிறார்’ என ராகுல் காந்தி பேசினார்” என்றும் சுட்டிக்காட்டினர்.

கூடுதலாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின், தனது குழந்தைகளைப் போல் கருதிய அதானி - அம்பானிக்கு எதிராகவும் பேசி வருகிறார் மோடி” என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், அதானி குறித்தும், அம்பானி குறித்தும் கேள்வி எழுப்பியதற்காக, கடந்த காலங்களில் ராகுல் காந்தி மற்றும் மஹுவா மொய்த்ரா எம்.பி பதவிக்கே அச்சுறுத்தல் விளைவித்த மோடி அரசு, தற்போது தோல்வி பயத்தில் புதிய நாடகம் நடத்தி வருவது கடும் சர்ச்சையாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories