அரசியல்

பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!

மோடியின் குடும்பத்தில் ஊழல்வாதிகள் நிரபராதிகளாக்கப்பட்டது அம்பலமான நிலையில், தற்போது பாலியல் வன்கொடுமை இழைப்போர்களும் சுதந்திரமாக சுற்றி திரிவது அம்பலமாகியுள்ளது.

பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடியின் குடும்பம், மோடியின் குடும்பம் என மோடியை தவிர மற்ற பா.ஜ.க தலைவர்கள் அனைவராலும், சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் முழக்கம், குற்றவாளிகளை குறிப்பிடும் குடும்பம் தான் என்ற உண்மை செய்தி, நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.

பா.ஜ.க கட்சி வெறும் கட்சி மட்டுமல்ல, அது குற்றங்களை போக்கும் ஒரு சலவை பொறி (Washing Machine) கூட தான் என காங்கிரஸ் வெளிக்காட்டிய உண்மை,

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரில் தொடங்கி, அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, ஜிண்டால், சுவேந்து அதிகாரி என எண்ணற்றவர்கள் மீதிருந்த குற்றங்களை, எவ்வாறு பா.ஜ.க நீக்கியது என்ற Indian Express குழுமத்தின் தகவல் படி, உறுதியானது.

அதன் படி, எதிர்க்கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு வலுக்கட்டாயக இழுக்கப்பட்ட 25 பேர் மீது இருந்த ஊழல் வழக்குகளில், 3 வழக்குகளை தண்டனையின்றி முடித்து வைத்து, 20 வழக்குகளை கிடப்பில் போட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு என்பதும் தெளிவுபெற்றது.

இந்நிலையில், ஊழல் விவகாரம் மட்டுமல்ல, பாலியல் குற்றவாளிகளின் கூடாரமும் பா.ஜ.க தான் என்ற தகவல், பா.ஜ.க.வின் வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஒன்றிய பா.ஜ.க.வால் பணியமர்த்தப்பட்ட ஆளுநர் ஆகியோரின் அட்டூழியங்களால் வெளிப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜ.க கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்துள்ளார் என தெரிந்தும், அவருக்கு வாக்கு சேகரித்த மோடி,

தனது கட்சியிலேயே, மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த பிரிஜ் பூஷனின் மகன் கரன் பூஷனுக்கு வேட்பாளர் வாய்ப்பளித்துள்ளார்.

கரன் பூஷன் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 44 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன.

பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!

இவை ஒருபுறம் இருக்க, பா.ஜ.க நிர்வாகிகள் மட்டுமல்ல, ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னிறுத்தும் ஆளுநர்களும், இதே பாலியல் வன்முறையாளர்கள் தான் என்பது மேற்கு வங்க ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ், ராஜ் பவன் ஊழிய பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.

இந்த சூழலில், பா.ஜ.க.வால் பாலியல் வெறி பிடித்தவர்கள் ஆட்சியில் இருந்தால், நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தான் செய்யும் என்பதற்கு இணங்க,

2022ஆம் ஆண்டிற்கான தேசிய குற்றப்பதிவின் படி, *2014-ஐ ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31% அதிகரித்துள்ளது. அதாவது 2022-ல் ஒன்றிய அமைச்சகத்தின் தகவல் படி, 4,45,256 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதியப்பட்டுள்ளது* தெரியவந்துள்ளது.

எனினும், இவ்வனைத்தையும் பார்த்துக்கொண்டு, இது போன்று எந்த சம்பவமும் நிகழாதவாறு, மெளனம் வாசிக்கிறார் மோடி.

ஆனால், அவரின் மெளனம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவும், காங்கிரஸ் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கவும் மட்டும் கலைக்கப்பட்டு வருகிற நிலை, ஜனநாயகத்திற்கு மற்றொரு அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் தரும் பா.ஜ.க.விற்கே அச்சுறுத்தல் தரும் கூட்டணியாக இந்தியா கூட்டணி வலுபெற்றிருப்பது, பா.ஜ.க.விற்கு மாபெரும் பின்னடைவை தேடி தந்துள்ளது. இதனால், திக்குமுக்காடி வரும் பா.ஜ.க, தோல்வி பயத்தில், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், என்ன பதிவிடுகிறோம் என புரியாமல்,

இஸ்லாமியர்களை எதிரிகளாக பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மதப்பிளவை உண்டாக்குகிற வெறுப்புமிக்க காணொளிகளை இணையத்தில் பதிவிட்டு, வாக்கு அடிபட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பதிவுகளை நீக்கியும் உள்ளது.

இதன் வழி, பா.ஜ.க.வால் முன்பு ‘400’ இடங்களை கைப்பற்றுவோம் என்ற முழக்கமும், காற்றோடு கரைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories