அரசியல்

"எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !

பரப்புரயின்போது இளம்பெண்ணுக்கு பொதுவெளியில் முத்தம் கொடுத்த மேற்கு வங்க பாஜக வேட்பாளருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

"எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா வடக்கு தொகுதியின் வேட்பாளராக ககென் முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சஞ்சல் பகுதியில் அமைந்துள்ள சிஹிபூர் என்ற கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

"எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !

அந்த சமயத்தில் இவர், அங்கிருந்த இளம்பெண்ணிடமும் வாக்கு சேகரித்து, அவருக்கு திடீரென முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி பல கண்டனங்களை எழுப்பி வரும் நிலையில், ”’மோடியின் குடும்பம்’ என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வருபவர், நமது வீட்டு பெண்ணுக்கு செய்யும் வேலையா இது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சித்து கேள்வியும் எழுப்பியுள்ளது.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கன்னங்கள் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக வேட்பாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "அந்த பெண் எனது உறவுக்கார பெண் ஆவார். அவர் எனக்கு குழந்தை மாதிரி. யாரும் குழந்தையை முத்தமிடுவது தவறல்ல. பெண்களை நான் தாயாகவே பார்க்கிறேன். என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுகிறது" என்றார். இவரது இந்த விளக்கம் தற்போது மேலும் பல கருத்துகளை பெற்று வருகிறது.

"எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !

கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, அவருக்கு பதில் கூறாமல், சிரித்துக்கொண்டே அவரது கன்னத்தில் லேசாக தட்டி சென்றார். இது அப்போது பல கண்டனங்களை எழுப்பிய நிலையில், அந்த பெண் செய்தியாளர் தனக்கு பேத்தி போன்றவர் என்று புதுவித விளக்கத்தையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"எனக்கு குழந்தை மாதிரி" - இளம்பெண்ணுக்கு முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் புதிய விளக்கம் !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. மேலும் பாலியல் புகாரில் சிக்கிய பல பேரில் பாஜகவினரும் உள்ளனர். அதோடு அண்மையில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிக்கினார். பாஜக ஆளும் மணிப்பூரில், கலவரத்தின்போது 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில பாஜக முதல்வர், "இது அடிக்கடி நிகழும் சம்பவங்கள்தான். அதில் ஒன்றுதான் இப்போது வெளியாகியுள்ளது" என்று பொறுப்பில்லாத வகையில் பேசினார்.

சிறுமி ஆசிபா, ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் என தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல இன்னல்கள், கொடுமைகள், சிக்கல்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது பொதுவெளியில் வாக்கு சேகரிப்பின்போதே பாஜக வேட்பாளர் இளம்பெண்ணுக்கு முத்தமிட்ட நிகழ்வு கண்டனங்களை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories