அரசியல்

”வரி பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒன்றிய அரசு” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!

ஒன்றிய அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது என எதிர்க்கட்சிகளுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

”வரி பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒன்றிய அரசு” : ப.சிதம்பரம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கியது.

2018-19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாகக் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்தால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு அடுத்து வங்கிக் கணக்கு விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை முறையாகத் தாக்கல் செய்யாததால், வட்டியுடன் அபராதமாக ரூ.1823 கோடி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பழைய pan cardஐ பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ததாகக் குற்றம்சாட்டி ரூ.11 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே, ”கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் வருமான வரித்துறையிடமிருந்து 11 நோட்டிஸ்கள் வந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ED வேலை செய்யாதபோது, IT துறை பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் குறித்து அவநம்பிக்கையில் இருப்பதைத்தான் இது காட்டுகிறது.” என தெரிவித்துள்ளார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், "தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு மற்றொரு கட்சிக்குப் பல ஆயிரம் கோடியை அபராதமாகச் செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்? ஒன்றிய பா.ஜ.க அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது" என காங்கிரஸ் மூத்த நிர்வாகி ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories