தேர்தல் 2024

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”: தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!

காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்தது ஒன்றிய அரசு, முத்தலாக் சட்டம் அதிமுக ஆதரவோடு அந்த சட்டத்தையும் கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஐ ஆதரித்து விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பு அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது பானை சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் ரவிக்குமார் அவர்களை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தப் பானை சின்னம் வாங்குவதற்கு சட்டரீதியான போராட்டம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தியாவில் உள்ள சின்ன சின்ன கட்சிகள் கூட கேட்ட சின்னங்களை ஒதுக்கி கொடுத்துள்ளார்கள். சட்டப் போராட்டத்திற்கு பிறகு பானை சின்னம் கிடைத்துள்ளது தேர்தலில் பாதி வெற்றி கிடைத்ததற்கு சமம் என்றார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார். சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலின் போது Go back மோடி என கூறினோம். இந்த முறை Get out மோடி என கூற வேண்டும்.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!

விழுப்புரத்தில் சமூக நீதி காண போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. வானூர் தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டுறவு ரோட்டில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஐடி பார்க் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும், உளுந்தூர்பேட்டை ஆசனூர் சிப்காட் பூங்காவில் தாய்வான் நாட்டு நிறுவனம் சார்பில் 28 கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலனி உற்பத்தி ஆலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள சுமார் 20 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது, ரூபாய் 20 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் 70% நிறைவு பெற்ற பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

வானூர் ஒன்றியம் கொலுவாரி சமத்துவபுரம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 100 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூபாய் 166 கோடி மதிப்பீட்டில் உணவு பூங்கா அமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டர். விழுப்புரம் நகரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தி தரப்படும். 96 ஹெக்டர் அளவுள்ள விழுப்புரம் நகரம் வி.மருதூர் ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதையாக மாற்றி தரப்படும், அதே சமயம் விவசாயிகள் பயன்படும் வகையில் நீர் பாசன வசதியும் செய்து கொடுக்கப்படும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், விழுப்புரம் மையப்பகுதியில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலகத்தை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டவுன் ஆளாக மாற்றி தரப்படும், விழுப்புரத்திலிருந்து காட்பாடி இடையே இரு வழி ரயில் பாதை அமைத்து தரப்படும்.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 483 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர்.

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான்.

எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார்.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!

பாதம் தாங்கி பழனிச்சாமி என்ற சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை காண்பித்தார். உங்களைப்போல் நேரத்தை தகுந்தது போல் ஆளைத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்தார். உங்களைப் போல் மாற்றி மாற்றி பச்சோந்தி போல் பேசுவதற்கு எங்களுக்கு தெரியாது என்றார். திருப்பத்தூர் பகுதியில் ஒரு அதிமுக நிர்வாகி எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு அரவிந்தசாமி போஸ்டர் வைத்து பேனர் வைத்துள்ளார் இப்படித்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

6.30 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வரியாக வழங்குகிறோம் ஆனால் நமக்கு ஒன்னே முக்கால் லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். அதாவது ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி தருகிறார்கள் என்றார். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா மோடி அவர்களை அழைக்க வேண்டும்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!

சிஏஏ சட்டம் 2019ல் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த போது ஆட்சியில் இருந்தது அடிமை அதிமுக அரசு. அதை ஆதரித்து வாக்களித்த கட்சி அதிமுக. அதை எதிர்த்து வாக்களித்த கட்சி திமுக. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால் என் முதல் கைது என்னவென்றால் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளி தெரிந்து ஒரு நாள் முழுவதும் சிறை சென்றேன்.

இன்றைக்கு ஒன்றிய அரசு சிஏஏ சட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் வேண்டுமானால் கொண்டு வரலாம் ஆனால் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனக் கூறிய ஒரே தலைவர் நம் முதலமைச்சர் மட்டும்தான். காஷ்மீர் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்தது ஒன்றிய அரசு, முத்தலாக் சட்டம் அதிமுக ஆதரவோடு அந்த சட்டத்தையும் கொண்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம். பழி தீர்க்க வேண்டிய நேரம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்.

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அடுத்த 21 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கழகத் துணை பொது செயலாளர் பொன்முடி, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் பொன் கௌதம சிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
“இது பழி தீர்க்க வேண்டிய நேரம்”:  தேர்தல் பரப்புரையில் அதிமுக - பாஜகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் உதயநிதி!
banner

Related Stories

Related Stories