அரசியல்

தெற்கு - வடக்கு - வட கிழக்கு: தொடர்ந்து சரியும் பாஜக - கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் கட்சிகள்!

ஒடிசா, சிக்கிமை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து பஞ்சாப் மாநில கட்சியும் விலகியுள்ளதால் பாஜக தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

தெற்கு - வடக்கு - வட கிழக்கு: தொடர்ந்து சரியும் பாஜக - கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் கட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கிய நிலையில், பாஜகவின் NDA கூட்டணியிலும் சில கட்சிகள் உள்ளது.

அந்த வகையில் வட மாநிலங்களில் ஒடிசா மாநில ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் (BJD) மற்றும் சிக்கிம் மாநில ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக பிஜு ஜனதா தளம் அறிவித்தது.

BJD விலகுவதாக அறிவித்ததைத்தொடர்ந்து நேற்றைய முன்தினம் சிக்கிம் மாநிலத்தின் ஆளுங்கட்சியான SKM - பாஜக கூட்டணியும் முறிந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், SKM கட்சி அதிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.

தெற்கு - வடக்கு - வட கிழக்கு: தொடர்ந்து சரியும் பாஜக - கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் கட்சிகள்!

இந்த இரண்டு கட்சிகளையும் தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் (SAD) கட்சி விலகியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தோல்வியடைந்தது. இதையடுத்து கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக மற்றும் SAD கட்சிகள் தனித்தனியாக களம் இறங்குகிறது.

முன்னதாக பாஜகவை சேர்ந்த எம்.பி-கள் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், இந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 5 பேர் தாங்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பின்வாங்கியுள்ளனர். அதேபோல் வட கிழக்கு மாநிலங்களில் மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக நேரடியாக களம் இறங்க பயந்து பின்வாங்கியுள்ளது.

தெற்கு - வடக்கு - வட கிழக்கு: தொடர்ந்து சரியும் பாஜக - கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் கட்சிகள்!

ஏற்கனவே தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் அடி விழுந்துள்ள நிலையில், தற்போது வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் பாஜக பலத்த அடி வாங்கியுள்ளது. மக்கள் இந்தியா கூட்டணி கட்சிக்கு தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வரும் நிலையில், எதிர்கட்சிகளை ஒன்றிய பாஜக அரசு அடக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் தேர்தல் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த தேர்தல் களத்தில் பாஜகவுடன் நிற்க பயந்து அதன் கூட்டணி கட்சிகளே பின் வாங்கியுள்ள சம்பவம், பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories