அரசியல்

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி : காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் என்னென்ன? - முழு விவரம் !

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி : காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் என்னென்ன? - முழு விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி : காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் என்னென்ன? - முழு விவரம் !

அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடும், வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளும் என்னென்ன என்ற பட்டியல் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி : காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் என்னென்ன? - முழு விவரம் !

அதன் விவரம் பின்வருமாறு :

1. திருவள்ளூர்

2. கடலூர்

3. மயிலாடுதுறை

4. சிவகங்கை

5. திருநெல்வேலி

6. கிருஷ்ணகிரி

7. கரூர்

8. விருதுநகர்

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி

banner

Related Stories

Related Stories