அரசியல்

இந்து வேறு - இந்துத்துவம் வேறு எனும் ‘இமாச்சலப் பிரதேசம்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இமாச்சலப் பிரதேசம் இன்றளவிலும், இனக்குழுக்களின் சமூகமாகவே இருந்து வருகிறது. ஆகவே தான், நிலையான நிதி ஆதாரங்களில் மாற்றமில்லாமல் சுற்றுலா, தோட்டக்கலை, விவசாயம் சார்ந்தே அம்மாநில அரசு இயங்கின்றது.

இந்து வேறு - இந்துத்துவம் வேறு எனும் ‘இமாச்சலப் பிரதேசம்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியா விடுதலை பெற்று சில மாதங்களில், சிம்லா மலைப்பகுதிகளில் மன்னராட்சி செய்து வந்த 30க்கும் மேற்பட்ட அரசுகளை ஒன்றிணைத்து தான், 1948- ல் அப்போதைய இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து, 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப் பேரவை தேர்தலின் வழி, மன்னராட்சி நீங்கிய குடியரசாட்சியை, இமாச்சல மக்கள் முதன் முறையாக ருசிக்க நேரிட்டது. எனினும், “மக்களால் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி” என்ற மக்களின் குடியுரிமை மனநிலை நெடுநாள் நீடிக்கவில்லை.

1956 ஆம் ஆண்டு, இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்ட போது, மூன்றாம் நிலை மாநிலமாக இருந்த இமாச்சலப் பிரதேசம், தகுதி நீக்கமடைந்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைக்கப்பட்டது.

இதன் விளைவாக, அப்போதைய மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, நிலப்பரப்பையும், மக்களையும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

1966 ஆம் ஆண்டு, மொழி வழி மாநிலங்களை பிரிப்பதற்கான மேற்படி நடவடிக்கைகள் வழி, பஞ்சாப் மாநிலத்தின் எல்லைகள் மறுசீரமைப்புக்கு உள்ளானது. ஆகையால், பஞ்சாப் மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டங்களான Kullu, Lahaul and Spiti ஆகியவை இமாச்சலப் பிரதேச நிலப்பரப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இந்து வேறு - இந்துத்துவம் வேறு எனும் ‘இமாச்சலப் பிரதேசம்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இந்நடவடிக்கையின் மூலம், இமாச்சல் பிரதேசத்தின் நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்தது. பஞ்சாபில் இருந்து குடியேறிய மக்கள் வாழும் பகுதி கீழ்நிலப்பரப்பு (Low area) என்றும், மேல்நிலப்பரப்பு பகுதிகளில் (Upper area - Kangra, Mandi) வாழ்பவர்களே உண்மையான இமாச்சல மக்கள் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

இதனால், இந்த இரண்டு சமூகக் குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வலுக்க தொடங்கின. இந்த முரண்களை சார்ந்த இமாச்சலப் பிரதேச அரசியலும் வலுபெற்றது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தின் மக்கள் தொகையும், நிலப்பரப்பும் அதிகரித்ததால், 1970 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத் தகுதி மசோதா நிறைவேற்றப்பட்டது. 1971 ஜனவரி 25 அன்று மாநிலத்தகுதியும் பெற்று இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது இமாச்சல்.

அதற்கு பிறகு, முறையே நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.

1990-களின் பிற்பகுதியில், ஒன்றிய ஆணைக்குழுவின் பரிந்துரை, இந்தியாவின் அடிப்படை அரசியலையே மாற்றியமைத்த போது, உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதுவரை இல்லாத வகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆதிகாரத்தை கைப்பற்றினர். எனினும், இமாச்சல் பிரதேச அரசியல் மட்டும் இதற்கு முற்றிலும் விதிவிலக்காகவே அமைந்தது.

இமாச்சலப் பிரதேசத்தின் அரசியல் என்பது இன்றளவும் பிற்போக்கு வகுப்பினரின் அரசியலாகவே நீடிக்கிறது. எனவே தான், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், OBC, தலித் அரசியல் இங்கு மிகவும் பலவீனமாகவே உள்ளது.

இந்து வேறு - இந்துத்துவம் வேறு எனும் ‘இமாச்சலப் பிரதேசம்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், ராஜ்புத் வகுப்பின்ர் 28% ஆகவும், பிராமணர்கள் 20% ஆகவும், ஓபிசி வகுப்பினர் 10.5% ஆகவும், பட்டியலின மக்கள் 24% ஆகவும் உள்ளனர். இது தமிழ்நாட்டின் பட்டியலின மக்களின் விழுக்காடை விட அதிகமாக இருக்கும் நிலையிலும், பட்டியலின அரசியல் தேக்க நிலையில் தான் உள்ளது. இதன் காரணமாக தான், இன்றளவும் இமாச்சலில் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு கொடிகட்டு பறந்து வருகிறது.

இமாச்சலப் பிரதேசம், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பிறப்பிடமாகவும் அமைந்துள்ளதால், இம்மாநிலத்தின் ஆட்சி என்பது பா.ஜ.க.விற்கு இன்றியமையாததாக மாறியது.

அதன் காரணமாக, கடந்த 2022 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தலைமைகளான உத்தரப் பிரதேச முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

எனினும், இங்கு 95.17 % மக்கள், ஒற்றை சமயம் சார்ந்தவர்களாகவே இருப்பதால், பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியல் முன்னெடுப்புகள் வீணாகி, தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றியது.

அதனை பொறுத்துக்கொள்ள இயலாத பா.ஜ.க, குறுக்கு வழியில், எவ்வாறாவது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற எண்ணத்தில், பல குதர்க்க செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அதனை உறுதி செய்யும் வகையில், அண்மையில் நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின் மோசடியும் அமைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை (மேல் அவை) உறுப்பினர்களில், ஒரு பகுதியினரின் பதவிக்காலம் கடந்த மாதம் நிறைவுற்றதையொட்டி, சில மாநில சட்டமன்றங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்வாறு, வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சட்டமன்றங்களில், இமாச்சலப் பிரதேச சட்டமன்றமும் ஒன்று.

பொதுவாக, சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, முன்னிறுத்தும் வேட்பாளர்கள் தான், பெரும்பான்மை காரணமாக வெற்று பெறுவது முறை. எனினும், வழக்கத்திற்கு மாறான, ஓர் அதிர்ச்சி செயல், இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத்தில் அரங்கேறியது.

பெரும்பான்மை கொண்டுள்ள காங்கிரஸ் முன்னிறுத்திய, வேட்பாளர் வெற்றி பெறாமல், காங்கிரஸ்-ஐ விட 15 உறுப்பினர்கள் குறைவாக கொண்டுள்ள பா.ஜ.க முன்னிறுத்திய வேட்பாளர் வெற்றியடைந்தார்.

அதிகாரம், பணத்தின் மீதான ஆசையின் காரணமாக விலைபோன, காங்கிரஸ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்ததே இதற்கு காரணமாய் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஆட்சியையே கவிழ்க்கவும் திட்டமிட்டது பா.ஜ.க. எனினும், காங்கிரஸ் தனது பெறும்பான்மையை நிரூபித்து, ஆட்சியை தக்க வைத்தது.

இதனையடுத்து, மாற்றி வாக்களித்த காங்கிரஸின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, அம்மாநில அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இவ்வாறான, சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகளின் வழி வெற்றி அடைய எண்ணும் பா.ஜ.க. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், இதே உத்தியை முன்னெடுக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இமாச்சலில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ், மக்களின் மனங்களை கவர்ந்த கட்சியாக திகழ்ந்து வருகிறதால்,
மணியோசை வரும் முன்னே, யானை வரும் பின்னே என்பதை போல் 2022- சட்டமன்ற தேர்தல் வெற்றியை விட, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெற இருக்கிற வெற்றி மிகப்பெரியதாக இருக்கும் என இமாச்சலப் பிரதேச மாநில மக்கள் தங்களது கருத்துகளை முன்னிறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories