அரசியல்

"ஆளே இல்லை, ஏன் என்னை அழைத்தீர்கள்" - கேரளாவில் பரிதாப நிலையில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி !

கூட்டமே இல்லாத நிலையில், பாஜக தொண்டர்களை பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி விமர்சித்த வீடியோ வெளியாகியுள்ளது.

"ஆளே இல்லை, ஏன் என்னை அழைத்தீர்கள்" - கேரளாவில் பரிதாப நிலையில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா என பல மாநிலங்களிலிருந்து மொத்தமாக 195 பேரை வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டில் யாரும் அறிவிக்கப்படவில்லை. பாஜக அறிவித்த 195 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள் என்பதும், ஒரே ஒரு நபர் மட்டுமே இஸ்லாமியர் என்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

"ஆளே இல்லை, ஏன் என்னை அழைத்தீர்கள்" - கேரளாவில் பரிதாப நிலையில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி !

இந்த வேட்பாளர்கள் பட்டியலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ்கோபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையிலும், வேறு வேட்பாளர் இல்லாததால் அவர் பெயர் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று திருச்சூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சுரேஷ்கோபி வருகை தந்தார்.

ஆனால், அங்கு கூட்டமே இல்லாத நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அவர் விமர்சித்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், " ஆளே இல்லாத இந்த நிகழ்ச்சிக்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? .எனக்கு நீங்கள் ஓட்டு வாங்கி தர வேண்டும். ஓட்டு போடும் வாக்காளர்களிடம் நீங்கள் பேச வேண்டும்.

எனக்கு நீங்கள் ஒத்துழைத்து வேலை செய்யாமல் இருந்தால் நான் நாளை திருவனந்தபுரத்துக்கு சென்று விடுவேன். திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளரான ராஜிவ் சந்திரசேகருக்கு பிரசாரம் செய்வேன். இங்கு போட்டியிடவேண்டும் என எனக்கு எந்த விருப்பமும் இல்லை. நான் இன்னும் நாமினேஷன் தாக்கல் செய்யவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories