அரசியல்

மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் : அதிரடியாக அறிவித்த மிசோரம் முதலமைச்சர் - கலக்கத்தில் பாஜக!

மிசோரம் தேர்தலில் பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என அம்மாநில முதலமைச்சர் சோரம் தங்கா அறிவித்துள்ளார்.

மோடியுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் : அதிரடியாக அறிவித்த மிசோரம் முதலமைச்சர்  - கலக்கத்தில் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நவம்பரில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒன்று மிசோரம். இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி மற்றும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் மிசோ தேசிய முன்னணி இடம் பெற்றுள்ளது.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளுமே தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதற்குக் காரணம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரமே காரணம். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தால் நிச்சயம் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த மிசோரம் முதலமைச்சர் சோரம் தங்கா பா.ஜ.கவை கை கழுவி விட்டுவிட்டார்.

இதனால் பா.ஜ.க குறைவான தொகுதிகளிலேயே போட்டியிடுகிறது. இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து அக்.30ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டேன். இப்படிச் செய்தால் எனது கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படும். மணிப்பூர் கலவரத்தால் மிசோரம் மக்கள் ஒன்றிய அரசு மீது கோபத்தில் உள்ளனர் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் முதலமைச்சர் சோரம் தங்கா. இவரின் இந்த பேச்சை அடுத்து பா.ஜ.கவினர் கலக்கத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories