அரசியல்

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!

ஈழப்போரின்போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் இருந்ததாக நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாலியல் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தன்னுடன் நெருக்கமாக சீமான் இருந்ததாகவும், தன்னை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் ,நடத்தியதாகவும், பின்னால் தன்னை விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு தற்போது வாழ்ந்து வருவதாகவும் பல குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!

அதோடு சீமான் அவருடன் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோவையும், புகைப்படத்தையும் விஜய லட்சுமி வெளியிட்டார். இது தற்போது வரை அரசியல் வட்டாரத்தில் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டை வகுத்துள்ளது. இவர் சீமான் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு சீமானின் ஆதரவாளர்கள் விஜய லட்சுமியை மிக மோசமாக வசைபாடி வந்தனர். மேலும் சீமானுக்கு ஆதரவாக ஹரி நாடார் தன்னை சாதி ரீதியிலும், தனிமனித ரீதியிலும் புண்படுத்தும்படி பேசியதாக குற்றஞ்சாட்டி வீடியோ ஒன்றினையும் வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!

தொடர்ந்து இந்த நிகழ்வால் விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கும் முயன்றார். இதையடுத்து அவர் வீட்டையும் காலி செய்ய நேரிட்டது. தொடர்ந்து சீமான் மீது இவர் வைத்து வந்த குற்றச்சாட்டுக்கு அவரது தொண்டர்களால் விஜய லட்சுமி கடுமையாக தாக்கப்பட்டார். எனினும் விடாமல் சீமான் மீதான குற்றசாட்டை தொடர்ந்து வீடியோ மூலம் கூறி வருகிறார் விஜய லட்சுமி.

இந்த சூழலில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய லட்சுமி மீண்டும் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை நடிகை விஜயலட்சுமி சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது 2011ல் புகார் அளித்தது போல் தற்போதும் மீண்டும் புதிதாக புகார் அளித்துள்ளேன். என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான்; நான் சீமானின் மனைவி. அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்.

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!

என்னை நீதிமன்றம் செல்லவிடாமல் சீமான் தடுத்துவிட்டார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சீமானை கைது செய்யும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். நாம் தமிழர் கட்சியை நடத்துவதால் தனது தம்பிகள் தன்னை பார்த்துக்கொள்வதாக சீமான் கூறுகிறார். நான் வெளியிட்டுள்ள வீடியோக்களுக்கு சீமானின் பதில் என்ன?” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சீமான் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது பேசிய அவர், விஜய லட்சுமி குறித்தும், அவர் ஏற்கனவே இதுபோல் 5-6 பேர் மீது புகார் கொடுத்ததாகவும், தான் 7-வது நபர் என்றும் கூறி அவதூறாக பேசியிருந்தார். அதோடு செய்தியாளர் குறுக்கே கேள்வி கேட்டபோதும், அவர்களிடமும் எகிறும் விதமாக பதிலளித்தார்.

“ஈழப்போர் நடக்கும்போது என்கூட ஆட்டம் போட்டுட்டு இருந்தாரு..”: சீமான் மீது விஜயலட்சுமி பரபர குற்றச்சாட்டு!

இந்த நிலையில், தன்னை பற்றி சீமான் பேசியதற்கு விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோ விட்டு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசிய வீடியோவில் ஈழ தமிழர்கள் பிரச்னையின்போது, சீமான் தன்னுடன் இருந்தாக தெரிவித்திருக்கிறார். இது தற்போது மேலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், "சீமான் கோபத்தை ஏற்படுத்தாதே.. நான் இதுவரை 6 பேர் மேல் புகார் அளித்துள்ளேனா.. அப்புறம் ஏன் எனக்கு மார்ச் மாதம் காசு ரூ.50 ஆயிரம் போட்ட?.. 2009-ல் ஈழத்தில் நடைபெற்ற போரின்போது, சீமான் என்ன செஞ்சுட்டு இருந்த.. அங்க மக்கள் செத்துட்டு இருந்தபோது, என்கூட சேர்ந்து ஆட்டம் போட்டுகிட்டு இருந்தியே.. எல்லாம் வெளில வரத்தான் போகுது..

நாவை அடிக்கிகோ சீமான்.. ஒரு பெண்ணோட விஷயத்துல கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோ.. நீயும் நானும் இனி நண்பர்களாக கூட ஆகா மாட்டோம்.. முழு எதிரிதான். செஞ்ச தப்ப உணராவிட்டால், நான் விட மாட்டேன். மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறாய்" என்று சீமானை ஒருமையில் திட்டி வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இது தற்போது வெளியாகி நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories