அரசியல்

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்”.. CPI டி.ராஜா கடும் எதிர்ப்பு!

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் என டி.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்”.. CPI டி.ராஜா கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியைச் சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டிலிருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு நடத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்”.. CPI டி.ராஜா கடும் எதிர்ப்பு!

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவெடுத்துள்ளது. இது குறித்து நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் என சி.பி.ஐ பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி கொடுத்துள்ள டி.ராஜா, "ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது. தற்போதைய காலகட்டத்துக்கு நேர்மையான தேர்தல் நடைமுறை தேவை. விகிதாச்சார தேர்தல் நடைமுறை தேவை.

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்”.. CPI டி.ராஜா கடும் எதிர்ப்பு!

அதனை விட்டுவிட்டு ஒரே தேர்தலைக் கொண்டுவருவது ஆபத்தானது. மக்களவையில் உள்ள பலத்தால் பா.ஜ.க ஒரே தேர்தல் திட்டத்தைக் கொண்டுவர முயன்றால் அது ஆபத்தில் சென்று முடியும். ஒரே தேர்தல் திட்டத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது அனைத்து கட்சிகளின் கருத்தைப் பெறாமல் ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்வது என்பதே தவறானது" என்றுதெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories